For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சற்றுநேரத்தில் ஓட்டுப்பதிவு!... வாக்களிக்குமுன் கவனிக்கவேண்டியவை இதோ!

06:33 AM Apr 19, 2024 IST | Kokila
சற்றுநேரத்தில் ஓட்டுப்பதிவு     வாக்களிக்குமுன் கவனிக்கவேண்டியவை இதோ
Advertisement

Lok Sabha election: இந்தியாவில் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் இன்றுமுதல் தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறும். முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 26ம் தேதியும், மூன்றாம் கட்ட தேர்தல் மே 7ம் தேதியும், நான்காம் கட்ட தேர்தல் மே 13ம் தேதியும், 5-ம் கட்ட தேர்தல் மே 20-ம் தேதியும், 6-ம் கட்ட தேர்தல் மே 25-ம் தேதியும், கடைசி மற்றும் 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1ம் தேதியும் நடைபெற உள்ளது.

Advertisement

அந்தவகையில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 மக்களவைத் தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தேர்தலில் வாக்கு அளிக்க செல்லும் பகுதியில் வாக்காளர்கள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

செல்போன்களை வெளியில் வைத்து செல்லவும் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை (EPIC) உங்களிடம் இல்லையென்றால், உங்களால் இன்னும் வாக்களிக்க முடியுமா? என்றால் ஆம், உங்கள் அடையாள அட்டை இல்லாமலேயே உங்கள் வாக்களிக்கும் உரிமையை நீங்கள் பயன்படுத்த முடியும் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி படுத்தி உள்ளது.

பாஸ்போர்ட், ஆதார் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட அட்டை, மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் அடையாள அட்டைகள் மற்றும் புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டைகள் ஆகியவை வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க ஏற்று கொள்ளத்தக்கவை என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது. இருப்பினும், வாக்காளர்கள் தங்கள் பெயர் தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வ வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும்.

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை எவ்வாறு சரிபார்க்கலாம் என்பது இங்கே: https://voters.eci.gov.in/ என்ற இணையதள லிங்கிற்கு சென்று "வாக்காளர் பட்டியலில் ”search” என்பதைக் கிளிக் செய்யவும். உங்கள் மாநிலம் மற்றும் மொழியைத் தேர்ந்தெடுக்கவும். உங்கள் விவரங்கள் மற்றும் captcha குறியீட்டை உள்ளிடவும். வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் தோன்றுகிறதா என்பதை பார்க்க "search" என்பதைக் கிளிக் செய்க. உங்கள் பெயர் தோன்றவில்லை என்றால், ஆன்லைன் அல்லது ஆஃப்லைன் முறையைப் பயன்படுத்தி வாக்காளர் பட்டியலில் உங்களைப் பதிவு செய்யுங்கள்.

ஆன்லைன் முறை: தேர்தல் ஆணைய இணையதளத்தில் "படிவம் 6" ஐ நிரப்பவும். தனிப்பட்ட விவரங்களை வழங்கவும் மற்றும் துணை ஆவணங்களை பதிவேற்றவும். படிவத்தைச் சமர்ப்பித்து, குறிப்பு எண்ணைப் பயன்படுத்தி விண்ணப்ப நிலையைக் கண்காணிக்கவும்.

Readmore: பூத் சிலிப் கிடைக்காதவர்கள் கவனத்திற்கு…! உடனே இதை மட்டும் பண்ணுங்க..!

Advertisement