For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வாக்காளர்களே நோட் பண்ணிக்கோங்க..!! பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது..!!

10:14 AM Apr 04, 2024 IST | Chella
வாக்காளர்களே நோட் பண்ணிக்கோங்க     பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது
Advertisement

பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Advertisement

மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதில் முதல் கட்டமாக வரும் 19ஆம் தேதி தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறுகிறது. தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை 6.23 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், கடந்த 1ஆம் தேதி முதல் பூத் சிலிப் வழங்கும் பணி தொடங்கப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதையடுத்து, இன்று முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு பணியும் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தான், பூத் சிலிப்பை அடையாள அட்டையாக பயன்படுத்த முடியாது என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் உள்ளிட்ட 12 ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் என்றும் வாக்காளர் விவரங்களுடன் தற்போது வாக்காளர்களின் புகைப்படமும் பூத் சிலிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது. மேலும், வாக்காளர் அட்டையில் வாக்காளரின் பெயரில் சிறிய அளவில் எழுத்து பிழை இருந்தால் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். அதேசமயம் வாக்காளர் அட்டையில் புகைப்படத்தில் மாற்றம் இருந்தால் வேறு புகைப்பட ஆவணத்தை காண்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Read More : தகாத உறவு..!! பெண்களை கல்லால் அடித்துக் கொல்லும் நடைமுறை மீண்டும் அமல்..!! உலக நாடுகள் அதிர்ச்சி..!!

Advertisement