உருட்டுக் கட்டையுடன் காத்திருந்த தொண்டர்கள்..!! சீமான் வீட்டை முற்றுகையிட்ட பெரியார் இயக்கத்தினர் கூண்டோடு கைது..!!
சென்னை நீலாங்கரையில் சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
தந்தை பெரியாரை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ச்சியாக இழிவுபடுத்தி பேசி வருகிறார். இதனை கண்டித்து நீலாங்கரையில் உள்ள சீமானின் வீட்டை முற்றுகையிடப் போவதாக பெரியார் ஆதரவு இயக்கங்கள், திராவிடர் கழகம், மே 17 இயக்கம் உள்ளிட்ட இயக்கங்கள் அறிவித்திருந்தன.
இதன் காரணமாக சீமானின் வீட்டில் 200-க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், நாம் தமிழர் தொண்டர்களும், நிர்வாகிகளும் நேற்றிரவு முதலே சீமான் வீட்டு முன் குவிந்துள்ளனர். இன்று காலை சீமான் வீட்டின் முன்பு இருந்த தொண்டர்கள் சிலர், உருட்டுக் கட்டையுடன் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தான், சென்னை நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிட முயன்றவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். திருவான்மியூர் முதல் நீலாங்கரை வரை வரிசை கட்டி நின்ற நிலையில், சீமான் வீட்டை நோக்கி பேரணியாக செல்ல முடிவு செய்திருந்தனர். ஆனால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி குண்டுக் கட்டாக கைது செய்தனர்.