For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

எடப்பாடியாருக்கு காத்துக்கிடந்த தொண்டர்கள்..!! ஆனால் காரில் இருந்து இறங்கியது யார் தெரியுமா..? செம ட்விஸ்ட்..!!

Before the DMK came to power, Stalin and Udhayanidhi had said that they would cancel the NEET exam. But what did you do?
10:19 AM Oct 21, 2024 IST | Chella
எடப்பாடியாருக்கு காத்துக்கிடந்த தொண்டர்கள்     ஆனால் காரில் இருந்து இறங்கியது யார் தெரியுமா    செம ட்விஸ்ட்
Advertisement

நெல்லை மாவட்டம் அம்பையில் அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நெல்லை வந்தார். தூத்துக்குடிக்கு விமானம் மூலமாக வந்த எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து கார் மூலம் அம்பை சென்றார். முன்னதாக, தூத்துக்குடி வந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

முன்னதாக எடப்பாடியை வரவேற்க அதிமுக நிர்வாகிகள் திரண்டு இருந்தனர். அப்போது அங்கு திடீரென நடிகர் விஜய் சேதுபதி வருகை தந்தார். அவரை பார்த்ததுமே அதிமுகவினர் ஆர்வத்துடன் ஓடிச்சென்று அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து, சற்று நேரத்தில் அங்கு வந்த எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, அம்பையில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி, திமுகவை கடுமையாக விமர்சித்தார்.

அவர் கூறுகையில், ”நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ஒரு சதவீகிதம் கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளோம். ஆனால், அதிமுக சரிந்துவிட்டது என்று சொல்கிறார்கள். சரிந்து போய்விட்டால் வாக்கு சதவிகிதம் எப்படி உயரும்..? 2014 மக்களவைத் தேர்தலில் திமுக ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை. மாறி மாறித்தான் ஆட்சி மாற்றம் வந்து கொண்டிருக்கிறது.

திமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன. திமுக ஆட்சியில் வீடு கட்ட முடியாது. கட்டுமான பொருட்களின் விலை உயர்ந்துவிட்டது. உதயநிதிக்கு துணை முதல்வர் பொறுப்பு கொடுத்தததுதான் ஸ்டாலினின் சாதனை. கடன் மட்டும் தான் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். திமுக ஆட்சி வரும் முன்பு ஸ்டாலினும், உதயநிதியும் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறினார்கள். ஆனால், என்ன செய்தீர்கள். நீட் தேர்வை ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக உதயநிதி சொன்னார். ஆனால், இன்று வரை ரகசியத்தை வெளியிடவில்லை" என்று விமர்சித்தார்.

Read More : ’வாய் மொழியில் வித்தை காட்டுவது நம் வேலையல்ல’..!! ’இவர்கள் யாரும் மாநாட்டிற்கு வர வேண்டாம்’..!! விஜய் பரபரப்பு அறிக்கை..!!

Tags :
Advertisement