வெடித்து சிதறும் எரிமலை!. பிலிப்பைன்சில் 87,000 பேர் வெளியேற்றம்!. விமானங்கள் ரத்து!
Philippines: மத்திய பிலிப்பைன்சில் உள்ள நீக்ரோஸ் தீவில் உள்ள கன்லான் எரிமலை நேற்று முன்தினம் வெடித்து சிதறியது. இதில் இருந்து நெருப்பு குழம்புகள் வெளியேறி வருவதோடு, வானுயரத்துக்கு கரும்புகை வெளியேறி வருகின்றது. எரிமலை சீற்றத்தினால் எரிமலையை சுற்றி அமைந்துள்ள ஏராளமான கிராமங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளன.
இதன் எதிரொலியாக கன்லான் எரிமலையில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள கிராமங்கள், நகரங்களில் இருக்கும் பொதுமக்கள் வெளியேறும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதுவரை சுமார் 87ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். எரிமலை வெடித்து சிதறியதால் 6 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. இரண்டு உள்ளூர் விமானங்கள் மாற்றுபாதையில் இயக்கப்பட்டது. எரிமலை சீற்றத்தினால் இதுவரை உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: வறண்டு வரும் பூமியின் நிலப்பரப்பு!. இந்தியாவுக்கே பெரும் பாதிப்பு!. ஐநா அதிர்ச்சி ரிப்போர்ட்!