For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வசமாக சிக்கிய VJ சித்து!! வைரலாகும் கார் வீடியோ!! நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

05:20 AM Jun 01, 2024 IST | Baskar
வசமாக சிக்கிய vj சித்து   வைரலாகும் கார் வீடியோ   நடவடிக்கை எடுக்குமா காவல்துறை
Advertisement

பிரபல யூடியூபர் VJ சித்து மீது சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement

VJ சித்து யூடியூப்பில் ‘ஃபன் பன்றோம்’ என்ற நிகழ்ச்சியின் வாயிலாக மக்களிடையே நன்கு பிரபலமானார். தற்போது 'VJ சித்து வி லாக்ஸ்' என்ற யூடியூப் சேனல ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார். மேலும் இவர் நடத்தும் 'மொட்டை மாடி பார்டி' எனும் நிகழ்ச்சியில் புதிதாக வெளியாகும் படங்களின் கதாநாயகர்களுடன் கலந்துரையாடல் எடுத்து அதனையும் யூடியூப்பில் வெளியிட்டு வருகிறார். இதில் ஆர்ஜே பாலாஜி, கவின், லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசன், விஜய் ஆண்டனி என பல பிரபலங்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பலருக்கு விருப்பமான நிகழ்ச்சியாக உள்ளது.

இந்த நிலையில் VJ சித்து மீது போக்குவரத்து விதிகளை மதிக்காமலும், அஜாக்கிரதையாக செல்போனில் பேசியபடி வாகனத்தை இயக்கியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் அலுவலகத்தில், கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த ஷெரின் என்பவர் புகார் அளித்துள்ளார்.மேலும் சம்பந்தப்பட்ட வீடியோ யூடியூப்பில் வெளியிட்ட நிலையில், அதனை பார்த்து மாணவர்கள், இளைஞர்கள் தவறான வழியில் செல்ல வழிவகுக்கும் என்றும், வீடியோவில் ஆபாச வார்த்தைகள், இரட்டை அர்த்த வசனங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து விதிகளை மீறிய VJ சித்து மீது தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.இதற்கு முன்னதாக யூடியூபர் டிடிஎஃப் வாசன் மீது இப்படியான புகார் எழுந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தற்போது VJ சித்து மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More: இனி தண்ணீரை வீணடித்தால் ரூ.2,000 அபராதம்…! கண்காணிப்பு குழு அமைத்து உத்தரவு…

Tags :
Advertisement