“எனக்கு வெட்கமே கிடையாதுங்க; மார்பகம் தெரியும் படி தான் கோவில் சிலையில் இருக்கும்..” நெட்டிசனுக்கு vj பார்வதி கொடுத்த பதிலடி…
மதுரையை பூர்வீகமாக கொண்ட vj பார்வதி, ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கினார். பின்னர், தமிழ் திரையுலகில் தொகுப்பாளராக, கலைஞர் தொலைக்காட்சியில் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி, தற்போது சினிமா நட்சத்திரமாக உயர்ந்தவர் தான் vj பார்வதி. ஹிப்ஹாப் ஆதி நடித்து வெளியான சபதம் படத்தில் வி.ஜே பார்வதி நடித்துள்ளார். இவர் யூ டியூப் வீடியோவில், பொது இடங்களில் மக்களை சந்தித்து நகைச்சுவையாக பேட்டி எடுக்கும் பிராங்க் ஷோ நிகழ்ச்சி தொகுத்து வந்துள்ளார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் பங்குபெற்று பிரபலமானார்.
மேலும், ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோ சர்வைவர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அர்ஜுன் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியில் ஆண்களுக்கு மத்தியில் கடுமையான டாஸ்கை அசால்டாக செய்து முடித்து, ரசிகர்களிடம் பாராட்டை பெற்றார். இவரது துணிச்சல் சிலருக்கு பிடித்திருந்தாலும், பலருக்கு இவர் ஆடை அணியும் விதம் பிடிக்கவில்லை. இதனால் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடும் எல்லா வீடியோ மற்றும் போட்டோவையும் ஆபாசமாக பலர் விமர்சித்து வருகின்றனர்.
அந்த வகையில், சமீபத்தில் நபர் ஒருவர் அவரை உருவக்கேலி செய்து கமென்ட் செய்திருந்தார். அதற்க்கு பார்வதி, என் தொப்பையை பற்றி கமெண்ட் வரும் என்று எனக்கு தெரியும். பெண்கள் எப்போதும் அழகான உடல் ஷேப்புடன் தான் இருக்க வேண்டுமா? அழகின் தரத்தை தீர்மானிப்பதற்கு நீ யார்? இப்படி கமெண்ட் செய்யும் நீங்கள் ஃபிட்டாக இருக்கீங்களா? என்று கேள்வி எழுப்பியுள்ள பார்வதி, நான் தொடர்ந்து இந்த தொப்பையுடன் பதிவுகளை போடுவேன் என்று பதில் அடி கொடுத்திருந்தார். அந்த வகையில் தற்போது ஒருவர், இப்படி எல்லாம் மோசமா டிரஸ் போடுறியே உனக்கு வெட்கமாவே இல்லையா என கேட்டிருந்தார்.
அதற்க்கு பதில் அளித்த பார்வதி, "எனக்கு வெட்கமே கிடையாதுங்க, எனக்கு அழகான உடம்பு இருக்கு, பெண்கள் எப்போது அழகான உடல் அமைப்பை கொண்டவர்கள்தான். கோவிலில் இருக்கும் கல்வெட்டுகளில் மார்பகம் தெரியும்படி தான் கோவில் சிலையில் இருக்கும் சித்திரங்கள் இருக்கிறது. அப்படி அந்த சிலையை நீங்க தெய்வீகமாக பார்க்கும் போது, ஒரு பெண் மார்டன் உடை அணியும் போது மட்டும் உங்களின் பார்வை ஏன் தப்பாக போகிறது. ஒரு பெண்ணோட ஆடையை வைத்து அவளை தவறாக பேசாதீர்கள். ஆண்கள் லுங்கியோடவையும், பட்டாப்பட்டி டவுசரோடும் வந்தா ஆண்களை ஆபாசமான வார்த்தையால் நாங்க அசிங்கமா சொல்லட்டுமா" என்று பதிலடி கொடுத்துள்ளார்.