வாவ்! இதுதான் இந்தியா.! ராமர் கோவில் விழாவிற்கு அழைக்கப்பட்ட பார்வையற்ற இஸ்லாமிய கவிஞர்.!
ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் ராமர் சிலை பிரதிஷ்ட்டை செய்யும் நிகழ்வு அயோத்தியில் கோலாகலமாக நடைபெற இருக்கிறது. இந்த திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக நாடெங்கிலும் இருந்து அரசியல் பிரமுகர்கள் திரைத்துறையைச் சார்ந்தவர்கள் சாமியார்கள் மடாதிபதிகள் கவிஞர்கள் பாடகர்கள் என பல பிரபலமானவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருக்கிறது .
ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் இந்த நிகழ்வில் 8000 பேர் ராமஜென்ம பூமி சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நிகழ்வில் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த இஸ்லாமிய கலைஞர் ஒருவர் இருக்கும் சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. அவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பதாக பேட்டி அளித்திருக்கிறார்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹாபியா பீப்லா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அக்பர் தாஜ். கண்பார்வை இழந்த இவர் சிறுவயது முதலே ஸ்ரீ ராமர் பற்றிய பஜனை பாடல்களை எழுதி வந்திருக்கிறார். தற்போது அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக இவரும் அழைக்கப்பட்டு இருக்கிறார். இது தொடர்பாக பேட்டி அளித்திருக்கும் அவர் " இந்தியா முழுவதும் பல பகுதிகளுக்கு சென்று இருந்தாலும் அயோத்தியில் அமைந்திருக்கும் ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு அழைக்கப்பட்டது தனது மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மேலும் தன்னுடைய மற்ற நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.