'விசித்ரா சொல்வது பொய்’..!! ’விஜய் டிவி போட்ட பிளான்’..!! புட்டு வைத்த பிரபலம்..!!
தமிழ் திரையுலகில் பொற்கொடி என்னும் திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகை விசித்ரா. இப்படத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து சின்னத்தாயி, தேவர் மகன், தலைவாசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு பிரபலமானார். இவர், தற்போது பிக்பாஸ சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடி வருகிறார்.
இந்நிலையில், தனது சினிமா வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை பிக்பாஸ் வீட்டில் பகிர்ந்துள்ளார். அது தற்போது பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகி உள்ளது. இப்படியான நிலையில், விசித்ரா சொன்னது எல்லாம் பொய் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். அதில், ”2000இல் நடந்த விஷயத்தை விசித்ரா இப்போ பிக்பாஸ் வீட்டில் வைத்து பேசுவதற்கு என்ன காரணம்? மன்சூர் அலிகான் விவகாரம் பெரியதாகிக் கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு விஷயத்தை விஜய் டிவி பிளான் போட்டு செய்திருக்கிறது.
குடித்து விட்டு இரவில் வந்து கதவை தட்டுவார். நான் ரூம் ரூமா மாறினேன். அதற்கு உதவியது அப்போது மேனேஜராக இருந்த கணவர் என்று இப்போது சொல்லும் விசித்ரா அப்போதே போலீசில் புகார் அளித்திருக்கலாமே. இப்போது இந்த விஷயத்தை சொல்ல காரணம், பிக்பாஸை யாரும் பார்ப்பதில்லை. அதற்காக விஜய் டிவி செய்த வேலை தான் இது.
மேலும், திருமணமாகி 3 குழந்தைகளை பெற்றுக்கொண்டு நிம்மதியாக வாழ்ந்து வரும் விசித்ரா, இந்த பாலியல் புகாரை கூற என்ன காரணம்? மேலும் பெரிய நடிகர் என்று சொன்னால் போதுமா யார் என்று சொல்ல தைரியம் இல்லாதவர் ஏன் அதை இப்போது சொல்கிறார். அவர் சொல்வது எல்லாமே பொய், பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓட்டுவாங்குவதற்காக இப்போது இந்த விஷயத்தை பேசி இருக்கிறார்” என்று கூறினார்.