For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'மதுவிலக்கை அமல்படுத்துவதில் என்ன தயக்கம்’..? திமுக அரசை வெளுத்து வாங்கிய திருமாவளவன்..!!

Thirumavalavan has said that AIADMK may also come to VISA's anti-liquor conference.
07:11 AM Sep 11, 2024 IST | Chella
 மதுவிலக்கை அமல்படுத்துவதில் என்ன தயக்கம்’    திமுக அரசை வெளுத்து வாங்கிய திருமாவளவன்
Advertisement

சென்னை அசோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தை கட்சி தலைமை அலுவலகத்தில் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”அக்டோபர் 2ஆம் தேதி விசிகவின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறவுள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 69 பேர் பலியானார்கள். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தபோது, மக்கள் வைத்த கோரிக்கை மதுபான கடைகளை மூட வேண்டும், சாராய கடைகளை முற்றாக ஒழிக்க வேண்டும் என்றனர். ஆகவே தான் மதுவிலக்கு கோரி விசிக சார்பில் மாநாடு நடத்தப்பட்டுகிறது.

Advertisement

மேலும் திமுகவிற்கும், அதிமுகவிற்கு இடதுசாரி கட்சிக்கும், விசிகவிற்கும் மதுவிலக்கு கொள்கையில் உடன்பாடு உண்டு என்றாலும் ஆட்சியில் உள்ள அரசுக்கு மதுவிலக்கை அமல்படுத்துவதில் என்ன தயக்கம் என்று தெரியவில்லை. மதுவிலக்கை தேசிய கொள்கையாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். மனித வளத்தை பாதிக்க கூடிய மது விற்பனையை அரசே செய்வது தேசத்திற்கு விரோதமான செயல்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், ”தேர்தல் அறிக்கையில் கூறிய மதுவிலக்கு கொள்கை திட்டத்தை திமுக அரசு உயிர்பிக்க வேண்டும் என்றும் மதுவை ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கள்ளுக் கடைகளை திறக்க வேண்டும் என்று கோரிக்கை வலுக்கிறதே என்ற கேள்விக்கு கள்ளு கடை உள்ளிட்ட எந்த போதை பொருளும் கூடாது என்பது தான் விசிகவின் நிலைப்பாடு என்று தெரிவித்தார். மேலும், விசிக-வின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவும் வரலாம். எல்லாம் கட்சிகளும் வரலாம். இந்த நிலைப்பாடை தேர்தல் அரசியலோடு ஒப்பிட்டு பார்க்கக் கூடாது என்று தெரிவித்தார்.

Read More : உயிருக்கே ஆபத்தாக மாறும் உடல் எடை குறைப்பு முயற்சி..!! இதை மட்டும் டிரை பண்ணாதீங்க..!!

Tags :
Advertisement