For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விஜய், விஷாலை தொடர்ந்தா..! 2026 தேர்தலில் களம் இறங்க போகும் சூர்யா…..!

09:44 AM May 13, 2024 IST | shyamala
விஜய்  விஷாலை தொடர்ந்தா    2026 தேர்தலில் களம் இறங்க போகும் சூர்யா…
Advertisement

வருகிற 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நடிகர் சூர்யா குதிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்னிந்தியாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் தனது 44வது படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். மேலும்,  அடுத்தடுத்து கர்ணா மற்றும் புறநானூறு ஆகிய படங்களில் அவர் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

Advertisement

வரலாற்றுப் பின்னணியில் உருவாகியுள்ள கங்குவா படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகர் சூர்யா தனது ரசிகர் மன்றங்களை வலுப்படுத்த முடிவு செய்துள்ளார். தமிழகம் முழுவதும் அனைத்து வார்டு பகுதிகளிலும் புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பணிகளில் அவரது ரசிகர் மன்றம் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், தமிழக அரசியல் களத்தில் நடிகர் சூர்யா குதிக்க முடிவு செய்து இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

ஏற்கனவே, நடிகர் விஜய் கட்சி தொடங்கிய நிலையில், 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலுக்கு முன் புதிய கட்சி தொடங்கி தீவிர அரசியல் பணிகளில் இறங்க போவதாக நடிகர் விஷாலும் அறிவித்தார். எனவே, 2026 தமிழக அரசியல் களம் நடிகர்கள் நிறைந்த களமாக மாறும் என தெரிய வந்துள்ளது.

“உணவுப் பொருட்களின் லேபிள்கள் தவறான வழிகாட்டுதல்களை தரலாம்” – ICMR எச்சரிக்கை.!!

Advertisement