முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”மோசமான நிலையில் விஷால்”..!! ”சிங்கம் போல மீண்டு வருவான்”..!! உருக்கமாக பேசிய நடிகர் ஜெயம் ரவி..!!

There is no one braver than Vishal. He is in a bad situation right now.
10:28 AM Jan 10, 2025 IST | Chella
Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் விஷால். இவர், தற்போது சுந்தர் சி இயக்கத்தில் நடித்துள்ள ”மதகத ராஜா” திரைப்படம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தாண்டு பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

Advertisement

இதில் விஷால் கை நடுக்கத்துடனும், பேச்சில் தடுமாற்றத்துடனும் காணப்பட்டார். அவரை படக்குழுவினர் கைத்தாங்கலாக பிடித்து சேரில் அமர வைத்தனர். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். இதற்கிடையே, அவருக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பதாகவும், காய்ச்சலுடனே ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது.

மேலும், நடிகர் விஷால் அவன் இவன் படத்தில் நடித்த போது மாறுகண் இருப்பது போல நடித்திருந்தார். அப்போதில் இருந்தே அவருடைய கண்களில் கண்ணீர் வர ஆரம்பித்தது. இதனால் ஸ்டீராய்டு போன்ற சிகிச்சைகளை பல ஆண்டுகளாக மேற்கொண்டு வந்ததால், தலைமுடி கொட்டி இப்படி கை நடுக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய நடிகர் ஜெயம் ரவி, ”விஷாலை விட ஒரு தைரியசாலி யாரும் கிடையாது. அவன் இப்போது ஒரு மோசமான கட்டத்தில் இருக்கிறான். ஆனால், அவனுடைய தைரியம் அவனை காப்பாற்றும். விரைவில் அவன் வருவான். அவனுடைய நல்ல மனசுக்கும், அவனது குடும்பத்தினரின் மனசுக்கும் கண்டிப்பாக அவன் சிங்கம் போல மீண்டு வருவான்” என்று தெரிவித்துள்ளார்.

Read More : Shocking | தங்கம் விலை கிடுகிடு உயர்வு..!! ஜெட் வேகத்தில் உயர்வதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!! இன்று ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

Tags :
சினிமா செய்திகள்விஷால்ஜெயம் ரவி
Advertisement
Next Article