For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

புதுசு புதுசா கிளம்பும் வைரஸ்கள்!. திடீரென வேகமெடுத்த ஓரோபோச் தொற்று!. அறிகுறிகள்!. கட்டுப்படுத்துவது எப்படி?

Viruses coming out new and new! Sudden acceleration of Oroboch infection! Symptoms! How to control?
06:57 AM Aug 20, 2024 IST | Kokila
புதுசு புதுசா கிளம்பும் வைரஸ்கள்   திடீரென வேகமெடுத்த ஓரோபோச் தொற்று   அறிகுறிகள்   கட்டுப்படுத்துவது எப்படி
Advertisement

Oropouche virus : டெங்குவை போன்ற தீவிர காய்ச்சலை ஏற்படுத்தும் ஓரோபோச் வைரஸ் தொற்று அமேசான் பிராந்தியத்தில் வேகமெடுத்துள்ளதால், அண்டை நாடுகளுக்கு பொது சுகாதாரப் பிரச்னையாக மாறியுள்ளது.

Advertisement

ஓரோபோச் என்பது பூச்சிக் கடி மூலம் பரவும் ஒரு வைரஸ் ஆகும். பெரும்பாலும் மிகச்சிறிய அளவிலான, மிட்ஜ் இனத்தைச் சேர்ந்த 'குலிகோயிட்ஸ் பரேன்சிஸ்' பூச்சிகள் மூலம் பரவுகிறது. இந்தப் பூச்சி அமெரிக்காவின் பரந்த நிலப்பகுதிகளில் அதிகளவில் காணப்படுகின்றன. கரீபியன் தீவுகளான டிரினிடாட் மற்றும் டொபாகோவில் உள்ள 'வேகா டி ஓரோபோச்' கிராமத்தில், 1955ஆம் ஆண்டில் இந்த நோய் பாதிப்புகள் முதன்முதலில் பதிவு செய்யப்பட்டது.

கடந்த அறுபது ஆண்டுகளில், பிரேசிலில் இந்த வைரஸால் 5,00,000க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிடுகின்றனர். இருப்பினும் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என்பதையும் அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள். இந்த ஆண்டு இதுவரை பிரேசில் நாட்டில் கிட்டத்தட்ட 10,000 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால் 2023இல் 800க்கும் அதிகமான பாதிப்புகள் மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான பாதிப்புகள் பிரேசிலின் அமேசான் பிராந்தியத்தில் நிகழ்ந்துள்ளன, அங்கு ஓரோபோச் உட்பரவு நோயாகக் (Endemic) கருதப்படுகிறது. பிரேசிலைத் தவிர, சமீப காலங்களில் பெரு, கொலம்பியா, ஈக்வடார், அர்ஜென்டினா, பிரஞ்சு கியானா, பனாமா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, பொலிவியா மற்றும் கியூபா ஆகிய நாடுகளில் ஓரோபோச் ஒரு பொது சுகாதாரப் பிரச்னையாக மாறியுள்ளது.

ஐரோப்பாவில், ஸ்பெயின், இத்தாலி மற்றும் ஜெர்மனியில் ஜூன் மாதம் முதல் ஒரு சில பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஆனால் இவை பிரேசில் மற்றும் கியூபாவிலிருந்து திரும்பும் பயணிகளிடையே காணப்பட்டது. இந்த வைரஸ் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து மற்றவர்களுக்கு பூச்சிக் கடிகள் மூலம் பரவுகிறது. பாதிக்கப்பட்டவர் உடனான நேரடி தொடர்பு அல்லது காற்று வழியாக போன்ற வேறு ஏதேனும் வகையில் இது பரவுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை.

கொசுக்கள் மூலமாகவும் இந்த வைரஸ் பரவுகிறது. பிரேசிலின் சுகாதார அமைச்சகத்தின் அறிக்கை ஒன்று, 'கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து அவர்களின் கருவுக்கு இந்த வைரஸ் பரவக்கூடும் என்பதற்கான சான்றுகள் கிடைத்துள்ளது' என்று கூறுகிறது. கர்ப்பம் மற்றும் கருவில் உள்ள குழந்தைகளின் மீது ஓரோபோச்சின் விளைவுகள் குறித்து இதுவரை நிரூபிக்கப்படவில்லை, ஆனால் ஆராயப்பட்டு வருகிறது.

ஓரோபோச், டெங்குவைப் போன்ற காய்ச்சலை ஏற்படுத்துகிறது. திடீரென அதிக காய்ச்சல், தலைவலி, கண்களுக்குப் பின்னால் வலி, மூட்டு விறைப்பு அல்லது வலி, அதீத குளிர், குமட்டல்/ஒவ்வாமை, வாந்தி , பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இந்த அறிகுறிகள் ஐந்து முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும். இருப்பினும், 60% நோயாளிகளில், சில நாட்கள் அல்லது வாரங்களுக்குப் பிறகு அறிகுறிகள் மீண்டும் தோன்றுகின்றன என்று அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (சி.டி.சி) கூறுகிறது.

ஓரோபோச் சிகிச்சைக்கு என குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் இல்லை. 'தி லான்செட் மைக்ரோப்' என்ற கல்வியியல் இதழில் உள்ள ஒரு கட்டுரை, ஓரோபோச் காய்ச்சலின் பரவல்களை "உலகளாவிய சுகாதாரத்திற்கு வளர்ந்து வரும் ஒரு அச்சுறுத்தல்" என்று வகைப்படுத்துகிறது மற்றும் புதிய சிகிச்சைகளுக்கான ஆய்வுகளின் பற்றாக்குறை குறித்தும் எச்சரிக்கிறது. "அறிகுறிகள் உள்ள நோயாளிகள் முறையான சிகிச்சை மற்றும் மருத்துவ கண்காணிப்புடன் ஓய்வெடுக்க வேண்டும்" என்று பிரேசிலின் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.

Readmore: தமிழகத்திற்கு போதிய நிதி ஒதுக்கி கொடுங்க… மத்திய ரயில்வே அமைச்சருக்கு பறந்த கடிதம்…!

Tags :
Advertisement