For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்த விராட் கோலி..!! ரசிகர்கள் செம ஹேப்பி..!!

Virat Kohli is back at number 1 in the list of India's most valuable celebrities.
11:02 AM Jun 19, 2024 IST | Chella
மீண்டும் நம்பர் 1 இடத்தை பிடித்த விராட் கோலி     ரசிகர்கள் செம ஹேப்பி
Advertisement

இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்களின் பட்டியலில் விராட் கோலி மீண்டும் நம்பர் 1 இடம் பிடித்துள்ளார்.

Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி. இவர், கிரிக்கெட்டில் படைத்த சாதனைகள் ஏராளம். அதேபோல, இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் கால்பந்து வீரர்கள் ரொனால்டோ மற்றும் மெஸ்சி ஆகியோருக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டு வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவின் மதிப்புமிக்க பிரபலங்களின் பட்டியலில் விராட் கோலி மீண்டும் நம்பர் 1 இடம் பிடித்துள்ளார். பிராண்டு மதிப்புகளின் அடிப்படையில் விராட் கோலி இந்த பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்த நிலையில், ரன்வீர் சிங் இரண்டாவது இடமும், ஷாருக் கான் 3-வது இடத்தையும் பிடித்துள்ளார். ஆல்யா பட் 5-வது இடத்தை பிடித்துள்ளார். கடந்த 2022இல் விராட் கோலியின் பிராண்ட் மதிப்பு 176.9 மில்லியன் டாலர் இருந்த நிலையில், தற்போது அது 29 சதவிகிதம் அதிகரித்து 227.9 மில்லியன் டாலர் வரை உயர்ந்துள்ளது.

விராட் கோலியைத் தொடர்ந்து பிராண்ட் மதிப்பின்படி 203.1 மில்லியன் டாலர் பெற்ற பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இரண்டாம் இடமும், ஷாருக்கான் 120.7 மில்லியன் டாலர் பெற்று மூன்றாவது இடமும் பிடித்துள்ளனர். இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி 95.8 மில்லியன் டாலர் உடன் 7-வது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 91.3 மில்லியன் டாலர் உடன் 8-வது இடத்திலும் உள்ளனர்.

Read More : சொந்த கிராம பெண்களை நிர்வாணமாக்கி இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்த இளைஞர்கள்..!! பள்ளி மாணவிகளையும் விடல..!!

Tags :
Advertisement