கேமராவ ஆஃப் பண்ணுங்க.. பெண் செய்தியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கோலி..!! - வைரலாகும் வீடியோ
என்னுடைய அனுமதி இல்லாமல் தன்னுடைய குடும்பத்தினரை புகைப்படம் எடுக்கக் கூடாது என ஆஸ்திரேலிய செய்தியாளர்களுடன் விராட் கோலி வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 26 ஆம் தேதி நடைபெறுகிறது. பாக்ஸிங் டே டெஸ்டாக மெல்போனில் இந்த போட்டி நடைபெற உள்ளது. இதற்காக இந்திய வீரர்கள் மெல்போனுக்கு வந்தடைந்தனர். அந்த சமயத்தில் விராட் கோலி விமான நிலையத்தில் ஒரு பெண் நிரூபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தனது குடும்பத்தை நோக்கி அந்த நிருபர் கேமராவை வைத்திருந்ததால் விராட் கோலி கோபம் அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தனது குழந்தைகளின் புகைப்படங்கள் வெளியே வரக்கூடாது என்று விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் தீவிரமாக பார்த்து வருகின்றனர். இந்நிலையில் விமான நிலையத்தில் தனது குழந்தைகளை நோக்கி கேமரா இருந்ததால் விராட் கோலி கோபமடைந்துள்ளார்.
முன்னதாக, தென்னாப்பிரிக்காவில் கடந்த 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டி ஒன்றில் விராட் கோலியின் மகள் வீடியோ ஒன்று வைரலானது. அப்போது விராட் கோலி இந்த வீடியோவை உடனே நீக்கி விடுங்கள் என ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்ததை அடுத்து அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read more ; ஜீவனாம்சம் கேட்ட மனைவி.. 20 மூட்டைகளில் சில்லறைகளை கொட்டிய கணவன்..!! – நீதிமன்றத்தில் பரபரப்பு