For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சச்சினின் ஆல்டைம் ரெக்கார்டை உடைத்த விராட் கோலி.. திணறும் ஆஸ்திரேலியா

Virat Kohli Breaks Sachin Tendulkar's Record Of Most Test 100s For India In Australia
06:41 PM Nov 24, 2024 IST | Mari Thangam
சச்சினின் ஆல்டைம் ரெக்கார்டை உடைத்த விராட் கோலி   திணறும் ஆஸ்திரேலியா
Advertisement

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரின் முதல் போட்டியில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு 534 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

Advertisement

முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நேற்று தொடங்கிய நிலையில், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 150 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல்அவுட்டானது.  இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி 487 ரன்கள் எடுத்திருந்தபோது, டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் சிறப்பாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி இருவரும் சதம் விளாசி அசத்தினர்.

ஜெய்ஸ்வால் 161 ரன்களும், விராட் கோலி 100* ரன்களும் எடுத்தனர். இந்த போட்டியில் சதம் விளாசியதன் மூலம், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் விளாசிய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். ஆஸ்திரேலிய மண்ணில் இதுவரை விராட் கோலி 7 சதங்கள் (இன்றைய சதத்தையும் சேர்த்து) அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் அடித்துள்ளார்.

அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஆஸ்திரேலிய மண்ணில் விராட் கோலி 10 சதங்கள் விளாசியுள்ளார். அனைத்து வடிவிலான போட்டிகளையும் சேர்த்து ஆஸ்திரேலிய மண்ணில் அதிக சதங்கள் விளாசிய வெளிநாட்டு வீரர் என்ற சாதனையையும் விராட் கோலி படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 23 வயதினை எட்டுவதற்குள் அதிக சதங்களை அடித்த வீரர்களின் பட்டியலில் ஜெஸ்வாலும் இணைந்துள்ளார்.

Read more ; Bank Jobs: IDBI வங்கியில் 600 காலியிடங்கள்… டிகிரி முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

Tags :
Advertisement