For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

'Akaay' வந்தாச்சு குட்டி Virat Kohli..! இரண்டாவது முறையாக தந்தையானார் விராட் கோலி.!

09:31 PM Feb 20, 2024 IST | 1newsnationuser7
 akaay  வந்தாச்சு குட்டி virat kohli    இரண்டாவது முறையாக தந்தையானார் விராட் கோலி
Advertisement

Virat Kohliஇந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோருக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிவித்திருக்கிறார் .

Advertisement

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மனாக இருப்பவர் முன்னாள் கேப்டன் விராட் கோலி. சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்து உலக கோப்பையின் தொடர் நாயகன் விருதை வென்றார். இந்நிலையில் இங்கிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டிக்கு அவரது பெயர் அறிவிக்கப்பட்ட நிலையில் தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இது தொடர்பாக பல்வேறு வதந்திகளும் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அனைத்திற்கும் விராட் கோலி பொறுமை காத்து வந்தார். இந்நிலையில் விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடிக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அனுஷ்கா சர்மா அவரது இணையதள பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்திருக்கிறார். மேலும் குழந்தைக்கு 'Akaay' என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள்.

தங்களது ஆண் குழந்தை கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி பிறந்ததாக தெரிவித்திருக்கிறார். மேலும் குழந்தை நலமுடன் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குழந்தைக்கு அனைவரும் வாழ்த்துக்களையும் தங்களது பிரார்த்தனைகளையும் வழங்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார் அனுஷ்கா சர்மா. விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஜோடிக்கு 2017 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களது முதல் குழந்தையான வமிகா ஜனவரி 2021 பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary: Virat Kholi And Anuska sharma blessed with baby boy and named their child as Akaay.

Read More : Annamalai: 2 நாட்களில் முக்கியப் புள்ளிகள் பாஜகவில் இணையவுள்ளனர்!… அண்ணாமலை சூசக பதில்!

Advertisement