அடுத்தடுத்து கோல்டன் டக் அவுட்!. விராட் கோலி சொதப்பல்!. டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே முதல்முறை!. ரசிகர்கள் அதிர்ச்சி!
Virat Kohli: அமெரிக்காவுக்கு எதிரான போட்டியிலும் விராட் கோலி கோல்டன் டக் அவுட் ஆனது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டி20 உலகக் கோப்பை வரலாற்றிலேயே விராட் கோலி கோல்டன் டக் அவுட் ஆவது இதுவே முதல்முறை ஆகும்.
9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நியூயோர்க்கின் நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் நடந்த 25வது லீக் ஆட்டத்தில் இந்தியா – அமெரிக்கா அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அமெரிக்க அணியின் தொடக்க வீரர்களுக்கு முதல் ஓவரின் முதல் பந்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது.
இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் முதல் ஓவரை வீசினார். அவர் போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி அமெரிக்க அணியை அரண்டு போக வைத்தார். அர்ஷ்தீப் சிங் தனது முதல் ஓவரின் முதல் பந்தில் சயான் ஜஹாங்கீர் விக்கெட்டையும், ஆறாவது பந்தில் முக்கிய வீரரான ஆண்ட்ரியாஸ் கவுஸ் விக்கெட்டையும் வீழ்த்தினார். 20 ஓவர் முடிவில் அமெரிக்க அணி, 8 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
111 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இழக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான விராட் கோலி ரோகித் சர்மா ஜோடி அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து அதிச்சியளித்தது. சூர்யகுமார் யாதவ், சிவம் துபே ஜோடி நிதானமாக விளையாடி 18.2 ஓவரிலேயே இலக்கை அடைந்து வெற்றியை தேடிதந்தனர். குறிப்பாக ரோகித் சர்மா 3 ரன்களில் வெளியேறினார். விராட் கோலி ரன் ஏதும் எடுக்காமல் கோல்டன் டக் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தார். இதன் மூலம் டி20 உலக கோப்பை வரலாற்றில் விராட் கோலி முதல் முறையாக கோல்டன் டக் ஆகியிருக்கிறார்.
எனினும் இதுவரை விளையாடிய மூன்று போட்டிகளில் விராட் கோலி மொத்தமாகவே 5 ரன்கள் தான் அடித்திருக்கிறார். அயர்லாந்து அணிக்கு எதிராக 1 ரன், பாகிஸ்தான் அணிக்கு எதிராக 4 ரன் என அடித்திருந்த விராட் கோலி அமெரிக்க அணிக்கு எதிராக கோல்டன் டக் ஆகி ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறார்.