Viral Video | வேலை வாங்கித் தருவதாக கூறி பாலியல் தொல்லை..!! பொதுப்பணித்துறை அதிகாரியை செருப்பால் அடித்து துவைத்த பெண்..!!
மத்தியப்பிரதேச மாநிலம் குவாலியரில், பொதுப்பணித்துறையில் பணியமர்த்தப்பட்ட துணை பொறியாளரை இளம்பெண் ஒருவர் செருப்பால் அடித்த வீடியோ வைரலாகி வருகிறது. தனக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி, தன்னை ஒரு ஓய்வு இல்லத்திற்கு வரவழைத்து, பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
தகவலின்படி, ராம் ஸ்வரூப் குஷ்வாஹா, பொதுப்பணித்துறையில் வேலை பார்த்து வருகிறார். வேலை சம்பந்தமாக இல்லத்திற்கு வர வேண்டுமென அந்த பெண்ணை அழைத்துள்ளார். நீண்ட நாட்களாகவே அப்பெண்ணுக்கு வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதி அளித்து வந்துள்ளார். இதனால், அவரது வீட்டிற்கு சென்ற பெண்ணை பொதுப்பணித்துறை அதிகாரி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.
இதனால், கோபமடைந்த பெண், அவரை செருப்பால் அடித்து துவைத்துள்ளார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில், அந்த பெண், ”நீங்கள் என்னை மிகவும் தொந்தரவு செய்தீர்கள். நீங்கள் என்னை உங்கள் சகோதரியாக்கினீர்கள். நான் இப்போது போலீஸை அழைக்கிறேன்” என்று கூறுகிறார். தாக்குதலுக்குப் பிறகு, பொறியாளர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர், ஆனால் அந்த பெண் காவல்நிலையத்தில் புகார் எதுவும் அளிக்கவில்லை. இச்சம்பவம் குறித்து சப் இன்ஜினியர் ராம்ஸ்வரூப் குஷ்வாஹா கூறுகையில், ”ஒரு பெண்ணுடன் இரண்டு பேர் வந்து என்னை அடித்தனர். ஏன் இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை. எனக்கு உடம்பு சரியில்லை. பிறகு பேசுகிறேன்” என்றார். இதற்கிடையே, இச்சம்பவம் குறித்து புகார் அளிக்கப்பட்டால், விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Read More : ”கல்யாணம் ஆகியும் அடங்கல”..!! தங்கைக்கு அடிக்கடி தொல்லை..!! கொலை செய்து கடலில் தூக்கிப் போட்ட கொடூரம்..!!