For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Viral Video | ஒரு Review கொடுத்தது குத்தமா..? வேட்டையனை வெச்சி செய்த பெண்..!! ரஜினி ரசிகர்களிடம் சிக்கிக் கொண்ட பரிதாபம்..!!

A video of some Rajinikanth fans surrounding the woman and asking how she could give a negative review to the film Pheedara is going viral.
11:45 AM Oct 11, 2024 IST | Chella
viral video   ஒரு review கொடுத்தது குத்தமா    வேட்டையனை வெச்சி செய்த பெண்     ரஜினி ரசிகர்களிடம் சிக்கிக் கொண்ட பரிதாபம்
Advertisement

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான வேட்டையன் திரைப்படம் அக்.10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்நிலையில், கேரளாவில் வேட்டையன் படத்தை பார்க்க சென்ற பெண் ரசிகை ஒருவரை ரஜினிகாந்த் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு வாக்குவாதம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தியேட்டர்களில் புதிய படங்கள் வந்தால் படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்களின் கருத்துக்களை பல யூடியூப் சேனல்கள் மற்றும் மீடியாக்கள் கேட்டு வருகின்றன. புதிய படத்திற்கு மக்கள் என்ன விமர்சனம் கொடுக்கின்றனர் என்பதை பார்க்க பலரும் ஆர்வமாக இருக்கும் நிலையில், 100-க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்கள் பப்ளிக் ரிவ்யூ என்கிற பெயரில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

ஆனால், சமீபகாலமாக படத்தைப் பார்த்துவிட்டு தங்களின் விருப்பு வெறுப்பு கருத்துக்களை சொல்லக்கூட முடியாத அளவுக்கு ரசிகர்களின் நிலைமை மாறியுள்ளது. இந்நிலையில், இளம்பெண் ஒருவர் வேட்டையன் படத்தை பார்த்துவிட்டு படத்தில் பெரிதாக எந்த ஒரு சுவாரஸ்யமும் இல்லை என படத்துக்கு எதிராக விமர்சனம் கொடுத்திருக்கிறார்.

அப்போது, சில ரஜினிகாந்த் ரசிகர்கள் அந்தப் பெண்ணை சூழ்ந்து கொண்டு அது எப்படி தலைவர் படத்துக்கு நெகட்டிவ் விமர்சனம் கொடுப்ப என கேள்வி கேட்டு வாக்குவாதம் நடத்திய வீடியோ வைரலாகி வருகிறது. அந்தப் பெண் ஆளை விடுங்கடா சாமி என ஓடும் அளவுக்கு ரஜினி ரசிகர்கள் கேரளாவில் கூட டார்ச்சர் செய்ததை விஜய் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

Read More : உங்கள் போனில் இருக்கும் PDF File-களால் பெரும் ஆபத்து..!! உடனே செக் பண்ணுங்க..!!

Tags :
Advertisement