சுங்கச் சாவடிகளில் VIP-களும் கட்டணம் செலுத்த வேண்டும்...! விரைவில் வெளியாகும் அறிவிப்பு..!
சுங்கச் சாவடிகளில் விஐபி கலாச்சாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது.
சுங்கச் சாவடிகளில் விஐபி கலாச்சாரத்துக்கு முற்றுப் புள்ளி வைக்க தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது. சுங்கச் சாவடிகளில் இனி வரும் காலங்களில் அனைவரும் கட்டணம் செலுத்தியே தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வகையில் விதிமுறைகளில் திருத்தங்கள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தற்பொழுது இருக்கும் நடைமுறையின் படி சுங்கச்சாவடிகளில் பொதுவாக உயரதிகாரிகளின் வாகனங்களுக்கு பயனர் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை செயலாளரின் தலைமையில் கடந்த வாரம் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த முன்மொழிவு வெளிப்பட்டது. மத்தியில் மீண்டும் புதிய அரசு அமைந்தவுடன் முதன்மையான நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்தினால், தேசிய நெடுஞ்சாலை சட்டத்தை திருத்தம் கொண்டு வர வேண்டும்.
யார் யார் கட்டண சலுகைக்கு உரியவர்கள் என்ற தகவல்களுடன் பெரிய அறிவிப்பு பலகைகளை ஒவ்வொரு சுங்கச் சாவடிகளின் இரு பக்கமும் வைப்பதால் மக்கள் பணம் வீணாகிறது என்று புகார்கள் எழுந்துள்ளன. இதனால் அரசு பணிகளில் உள்ள சில தரப்பினருக்கு அதிருப்தியும் எழுகிறது. இதற்குக் காரணம், சுங்கச்சாவடிகளில் கட்டணத் தள்ளுபடிக்குத் தகுதிபெறும் வாகனங்களுக்கு அரசாங்கம் ஏற்கனவே FASTagகளை வழங்கியுள்ளது.