மெக்சிகோவில் புதிய அதிபர் பதவியேற்று 24 மணி நேரம் கூட ஆகல.. நடுரோட்டில் சுட்டுக் கொலை!!
மெக்சிகோவில் முதல் முறையாக புதிய அதிபராக தேர்வான பெண் பதவியேற்ற 24 மணி நேரத்திலேயே சுட்டுக்கொள்ளப்பட்டார்.
மெக்சிகோவில் அதிபர் தேர்தல் கடந்த 2ம் தேதி நடந்தது. நாட்டின், 200 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக, இரண்டு முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களாக பெண்கள் நிறுத்தப்பட்டனர். இந்த தேர்தலில், ஆளும் மொரேனா கட்சியின் வேட்பாளரான கிளாடியா ஷீன்பாம், தனது 61 ஆவது வயதில், அதிபரானார். இதன் வாயிலாக, மெக்சிகோவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்தத் தேர்தலில் 58.3 முதல் 60.7 சதவீத வாக்குகளை கிளாடியா ஷீன்பாம் பெற்றுள்ளதாக அந்த நாட்டின் தேசிய தேர்தல் அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் கிளாடியா அதிபர் ஆவது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மெக்சிகோ நாட்டில் 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்வு செய்யப்படுகிறார். இதனை அதிகாரபூர்வ விரைவான எண்ணிக்கை உறுதி செய்துள்ளது.
இதுகுறித்து கிளாடியா ஷீன்பாம் கூறுகையில், ”நான் மெக்சிகோ நாட்டின் முதல் பெண் அதிபர் ஆகிறேன். இது எனது வெற்றி மட்டுமல்ல. நம் அனைவருடைய வெற்றியாகும். இதன் மூலம் மெக்சிகோ ஜனநாயக நாடு என்பதை நாம் நிரூபித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். தற்போதைய பிரதமர் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் வழியில் கிளாடியாவின் ஆட்சிக் காலம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
அதனைத்தொடர்ந்து, கிலவ்டியா செயின்பவும் மெக்சிகோ நாட்டின் அதிபராக பொறுப்பேற்றுள்ளார். இவர் பொறுப்பேற்று 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் பெண் மோயர் ஒருவர் பொது இடத்தில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற மேயர் தேர்தலில் சான்சஸ் என்பவர் வெற்றி பெற்றார். இவரை கடந்த வருடம் செப்டம்பர் மாதம் மர்ம நபர்கள் சிலர் கடத்திய நிலையில் அதன் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 4-ம் தேதி சான்சஸை மர்ம நபர்கள் சிலர் பொதுமக்கள் நடமாடும் இடத்தில் வைத்து சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.