வன்முறை உச்சம்!. பிரதமர் ஷேக் ஹசீனாவின் உள்ளாடைகளை எடுத்துக்கொண்டு போராட்டக்காரர்கள் அட்டூழியம்!
Bangladesh Unrest: வன்முறை காரணமாக நாட்டில் இருந்து வெளியேறிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் உள்ளாடைகள் முதல் அவர் பயன்படுத்திய பொருட்களை போராட்டக்காரர்கள் எடுத்துச்சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும் கடந்த 3 வாரங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மேலும் இதுதொடர்பான வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தொடர் போராட்டத்தையடுத்து, வங்கதேச பிரதமர் பதவியை ஹசீனா ராஜிநாமா செய்ததாகவும், ராணுவ ஆட்சி அமைக்கப்படுவதாகவும் வங்கதேச ராணுவத் தளபதி அறிவித்துள்ளார். பிரதமர் ஷேக் ஹசீனா, தலைநகர் டாக்காவில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் வெளியேறியதாகவும் தற்போது C-130 என்ற அந்த விமானம் டெல்லியை நோக்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விமானம் பாட்னாவை கடந்து உத்தரபிரதேச -பிகார் எல்லையை அடைந்ததாகவும் டெல்லி வந்த பிறகு அவர் அங்கிருந்து லண்டன் செல்லலாம் என்றும் கூறப்படுகிறது. உளவுத்துறை உள்ளிட்ட இந்திய பாதுகாப்பு முகமைகள் விமானத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றன. இந்நிலையில் ஷேக் ஹசீனாவின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்தனர். பிரதமரின் இல்லத்தில் உள்ள படுக்கையிலும், இருக்கைகளிலும் போராட்டக்காரர்கள் படுத்து ஓய்வெடுக்கும் காணொலிகள் இணையத்தில் வைரலாகின.
மேலும், பிரதமரின் இல்லத்தில் இருந்த பொருள்களையும் சிலர் தூக்கிச் சென்றனர். அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்தனர். மேலும் போராட்டக்காரர்கள் உணவு அருந்தும் வீடியோக்களும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஒரு இளைஞர் பிரதமரின் ஹசீனாவின் உள்ளாடைகளை எடுத்துக்கொண்டு சென்றார். மற்றொரு இளைஞர் பிரதமரின் சேலையை உடுத்திக்கொண்டு சென்றார். இந்த வீடியோக்கள் சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது.
Readmore: Paris Olympics 2024 | வெண்கலப் பதக்கப் போட்டியில் லக்ஷயா சென் தோல்வி..!!