இந்திய கிரிக்கெட்டர் வினோத் காம்ப்லி மருத்துவமனையில் அனுமதி.. நாளுக்கு நாள் மோசமாகும் உடல்நிலை..!!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்லி உடல்நிலை மோசமடைந்ததையடுத்து தானே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். இந்திய அணிக்காக 17 டெஸ்ட் மற்றும் 104 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய காம்ப்லி, சர்வதேச அளவில் 6 சதங்களுடன் 3000 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வினோத் காம்ப்லி உடல்நிலை மோசமடைந்ததையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தேவையான அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மருத்துவர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 52 வயதான அவர் சமீபத்தில் தனது குழந்தை பருவ நண்பரும் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை ரமாகாந்த் அச்ரேக்கரின் நினைவிடத்தில் சந்தித்த பின்னர் தலைப்புச் செய்திகளில் இருந்தார்.
ஒரு காலத்தில் திறமையான கிரிக்கெட் விளையாட்டு வீரராக அறியப்பட்ட வினோத் காம்ப்லி சச்சீனின் நெருங்கிய நண்ப்ர். பார்க்க 75 வயது தோற்றத்துடன் இருக்கும் காம்ப்ளி, நீண்ட நாளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துவருகிறார். அவரது இந்த உடல்நலக் குறைவுக்கு முக்கிய காரணம் அவரின் குடிப்பழக்கம்
சமீபத்தில் உடல்நலம் தேறி வந்த அவர், சனிக்கிழமை இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது நலமாக உள்ளார். இருப்பினும், அவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று சிறப்பு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். 1983 உலகக் கோப்பையின் அணி உறுப்பினர்கள் அவருக்கு நிதி உதவி வழங்க முன்வந்தனர்.
சிகிச்சையில் உள்ள வினோத் காம்ப்ளி செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "நான் மறுவாழ்வுக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன். நான் எதற்கும் பயப்படாததால் நான் அங்கு செல்ல விரும்புகிறேன். எனது குடும்பம் என்னுடன் உள்ளது. அதே நேரத்தில், "ஜடேஜா எனக்கு மிகவும் நல்ல நண்பர். அவர் என்னை சந்திக்க வந்து 'வா, எழுந்திரு' என்றார். சமீப காலமாக நிறைய பேர் எனக்கு போன் செய்தார்கள். அனைவரும் என்னை பார்த்தனர் என்று கூறினார்.
Read more ; அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட BSNL..!! இனி சிம் கார்டே தேவையில்லை..!! வருகிறது eSIM..!!