For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வினேஷ் போகட்-க்கு பாரத ரத்னா? ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் கோரிக்கை..!!

Vinesh Phogat, who participated in the Olympics, was disqualified for being 100 grams overweight. In this case, many people are trending on Twitter to give him the count
01:36 PM Aug 13, 2024 IST | Mari Thangam
வினேஷ் போகட் க்கு பாரத ரத்னா  ட்விட்டரில் ட்ரெண்ட்டாகும் கோரிக்கை
Advertisement

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வினேஷ் போகத், 100 கிராம் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவருக்கு நாட்டின் உயரிய விருது வழங்க வேண்டும் என ட்விட்டரில் பலரும் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Advertisement

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதினார் இந்தியாவின் வினேஷ் போகத். முதல் நிமிடத்திலேயே வினேஷின் ஆக்ரோஷமான ஆட்டத்தால் நிலை தடுமாறிய யூஸ்னிலிஸ் எந்த ஸ்கோரும் எடுக்கவில்லை. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத். இதன் மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பில் மல்யுத்த மகளிர் பிரிவின் இறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

50 கிலோ எடை பிரிவில் போட்டியிடும் வினேஷ் போகத்துக்கு இந்திய நேரப்படி இன்று காலை 9 மணியளவில் எடை தகுதி சோதனை செய்தபோது 50 கிலோ மற்றும் 100 கிராம் எடை இருந்தது. நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்ததால் வினேஷ் போகத் ஒலிம்பிக் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் 50 கிலோ எடை பிரிவு பெண்களுக்கான ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் அமெரிக்க வீராங்கனைக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படும். போட்டியின்றி அவர் தங்கப் பதக்கம் பெறுவார். வெள்ளிப் பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி முறைப்படி நடத்தப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் மல்யுத்த சங்கம் அறிவித்திருந்தது.

நாடு முழுவதையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய வினேஷ் போகத்தின் ஒலிம்பிக் கனவு தகர்ந்தற்கு மத்தியில் மற்றுமொரு பேரிடியாக இந்திய மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக வினேஷ் போக்த் அறிவித்துள்ளார். இந்நிலையில், இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க சமூக வலைதளங்களில் கோரிக்கை எழுந்துள்ளது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற வினேஷ் போகத், 100 கிராம் கூடுதல் எடை காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு பின்னால் அரசியல் இருப்பதாக ஒரு தரப்பு குற்றம் சாட்டுகிறது. இந்நிலையில் அவருக்கு நாட்டின் உயரிய விருது வழங்க வேண்டும் என ட்விட்டரில் பலரும் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

Read more ; ஊக்கமருந்து..!! இந்திய பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத்துக்கு தடை..!!

Tags :
Advertisement