For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வெள்ளி பதக்கம் கிடைக்குமா? வினேஷ் போகத் வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு..!!

Vinesh Phogat was disqualified ahead of her Paris Olympics 2024 gold medal match. CAS' decision on the Vinesh appeal will be made today.
07:42 PM Aug 13, 2024 IST | Mari Thangam
வெள்ளி பதக்கம் கிடைக்குமா  வினேஷ் போகத் வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு
Advertisement

பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகட் வழக்கில் இன்று இரவு 9.30 க்கு தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

Advertisement

ஒலிம்பிக் மல்யுத்தத்தில் பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதினார் இந்தியாவின் வினேஷ் போகத். பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு ஒலிம்பிக் மல்யுத்த அரையிறுதியில் கியூபா வீராங்கனையை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் வினேஷ் போகத். இதன் மூலம், வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பில் மல்யுத்த மகளிர் பிரிவின் இறுதிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார்.

50 கிலோ எடை பிரிவில் போட்டியிடும் வினேஷ் போகத்துக்கு எடை தகுதி சோதனை செய்தபோது 50 கிலோ மற்றும் 100 கிராம் எடை இருந்தது. நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்ததால் வினேஷ் போகத் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் 50 கிலோ எடை பிரிவு பெண்களுக்கான ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் அமெரிக்க வீராங்கனைக்கு தங்கப் பதக்கம் வழங்கப்படும். போட்டியின்றி அவர் தங்கப் பதக்கம் பெறுவார். வெள்ளிப் பதக்கம் யாருக்கும் வழங்கப்படாது. வெண்கலப் பதக்கத்துக்கான போட்டி முறைப்படி நடத்தப்படும் என்று சர்வதேச ஒலிம்பிக் மல்யுத்த சங்கம் அறிவித்திருந்தது.

தகுதி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, வினேஷ் போகத் விளையாட்டிற்கான நடுவர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதுமட்டுமல்லாமல் இந்த ஆண்டுடன் மல்யுத்த போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். நடுவர் நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்று இரவு 9.30 க்கு வழங்கப்பட உள்ளது. வினேஷ் போகத்-க்கு ஆதரவாக தீர்ப்பு வருமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்..

Read more ; தரங் சக்தி 2024 | கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் ராணுவ தளவாட கண்காட்சி..!!

Tags :
Advertisement