அடடே..!! இப்படி ஒரு கிராமமா..? நம்பவே முடியல..!! ரூ.10 லட்சம் வருமானம்..!! அப்படி என்ன தொழில் பண்றாங்க..?
இந்தியாவின் பணக்கார கிராமம் எது? அந்த கிராமம் எங்கு உள்ளது? விவசாயத்தை மட்டுமே நம்பி வாழும் அந்த கிராம மக்களின் ஆண்டு வருமானம் என்ன என்பது குறித்தெல்லாம் இந்தப் பதிவில் பார்ப்போம்.
பணம்.. ‛தேசப்பிதா’ காந்தி போட்டோவுடன் உலா வரும் இந்த மதிப்பு மிக்க தாள் இன்றி இன்றைய உலகில் எதுவும் நடக்காது. பிறப்பு முதல் இறப்பு வரை நம் வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயமும் பணத்தை சார்ந்தே தான் உள்ளது. இதனால் தான் நாம் சொந்த தொழில், வேலை செய்து பணம் சம்பாதித்து வருகிறோம். இதன்மூலம் கோடீஸ்வரர்களாகவும், லட்சாதிபதிகளாவும் பலரும் மாறி வருகின்றனர். நம்மை பொறுத்தவரை உலகில் பெரும் பணக்காரர்கள், ஆசியாவின் பெரும் பணக்காரர்கள், இந்தியாவின் பெரும் பணக்காரர்கள் குறித்த விவரத்தை நாம் அறிந்து வைத்திருப்போம்.
ஆனால் இந்தியாவில் உள்ள பணக்கார கிராமம் எது என்று உங்களுக்கு தெரியுமா? அந்த கிராமத்தின் ஆண்டு வருமானம் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? வாங்க பார்க்கலாம். மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் ஹிவ்ரே பஜார் எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமம் தான் இந்தியாவிலேயே பணக்கார கிராமமாக உள்ளது. இந்த கிராமத்தில் மொத்தம் 305 குடும்பங்கள் வசித்து வருகின்றன. மொத்த மக்கள் தொகை 1,250 ஆகும். மக்கள் தொகை குறைவாக இருக்கிறதே? அப்படியென்றால் எப்படி பணக்கார கிராமம் என்று கேட்கிறீர்களா?. அதற்கு பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது.
அதாவது இங்கு வசிப்போரில் 80 பேர் கோடீஸ்வரர்களாக உள்ளனர். மேலும், 50 குடும்பங்கள் ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் ஈட்டுகின்றன. இதுதான் அந்த ஹிவ்ரே பஜார் கிராமத்தை பணக்கார கிராமம் என்று அழைக்க முக்கிய காரணம். இந்த கிராம மக்கள் இவ்வளவு பணம் சம்பாதிக்கிறார்களே? என்ன தொழில் செய்கின்றனர்? என்று கேட்டால் நீங்கள் இன்னும் ஆச்சரிப்படுவீர்கள். ஏனென்றால், அந்த கிராம மக்களின் பிரதான தொழில் என்பது விவசாயம் தான். இந்த கிராம மக்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை தான் செய்து வருகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் அதிகளவிலான காய்கறிகளை பயிரிட்டு லாபம் ஈட்டி வருகின்றனர். ஹிவ்ரே பஜார் கிராமத்தின் தனிநபர் வருமானம் என்பது நாட்டின் முதல் 10 இடங்களில் உள்ள கிராமங்களின் சராசரி மாத வருமான ரூ.890யை விட இரண்டு மடங்கு அதிகமாம். கடந்த 20 ஆண்டுகளில் கிராம மக்களின் சராசரி வருமானம் என்பது 20 மடங்கு வரை அதிகரித்துள்ளது. தற்போது இந்தியாவின் பணக்கார கிராமமாக பெயர் பெற்றுள்ள ஹிவ்ரே பஜார் ஒரு காலத்தில் வானம் பார்த்த பூமியாக இருந்தது. 1980, 1990 காலங்களில் இந்த கிராமம் கடும் வறட்சியின் பிடியில் சிக்கியது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு மக்கள் வறுமையால் தவித்தனர்.
1990 காலக்கட்டத்தில் கிராமத்தின் 90 சதவீத குடுமம்பங்கள் ஏழைகளாக இருந்தனர். இதனால் கிராமத்தில் உள்ளவர்கள் வேறு இடங்களுக்கு பிழைப்பு தேடி சென்றனர். இந்த காலம் தான் அந்த மக்களை மாற்றி யோசிக்க வைத்தது. அதாவது வறட்சியில் இருந்து மீள வேண்டும் என்பதற்காக கிராம மக்கள் அனைவரும் இணைந்து கூட்டு வன மேலாண்மை குழுவை உருவாக்கினர். இந்த குழு கிணறு தோண்டுவது, மரங்களை நடும் பணியை கிராமத்தில் தொடங்கினர். அதோடு வறட்சியின் பிடியில் சிக்கிய கிராமத்தில் விவசாயம் செய்து முன்னேறுவது பற்றி சிந்தித்தனர்.
கிராமத்தில் அதிக தண்ணீரை உறிஞ்சும் பயிர்களை விவசாயம் செய்ய வேண்டாம் என அதற்கு தடை விதித்தனர். மேலும், அனைவரும் சேர்ந்து கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட கிணறுகளை வெட்டியிருந்தனர். பிறகு கிணற்று பாசனம் மூலம் தொடர்ந்து விவசாயம் செய்து முன்னேற்றமடைந்துள்ளனர். தற்போது விவசாயம் நன்கு கைக்கொடுப்பதால் ஹிவ்ரே பஜார் மக்கள் நகரங்கள் நோக்கி புலம்பெயர்வதை கைவிட்டுள்னர். மேலும் இதற்கு முன்பு நகரங்களுக்கு சென்றவர்களும் கிராமத்துக்கு திரும்பியுள்ளனர்.
Read More : BIG BREAKING | கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக உறுப்பினர்கள் சஸ்பெண்ட்..!! சபாநாயகர் அதிரடி உத்தரவு..!!