For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

“என் மனைவி ஆசைப்பட்டதால் தான் இப்படி செஞ்சோம்”; திருமணத்திற்கு பின் பிக் பாஸ் பிரபலம் அளித்த பேட்டி..

vikraman was married
08:06 PM Nov 06, 2024 IST | Saranya
“என் மனைவி ஆசைப்பட்டதால் தான் இப்படி செஞ்சோம்”  திருமணத்திற்கு பின் பிக் பாஸ் பிரபலம் அளித்த பேட்டி
Advertisement

பிக் பாஸ் பாக்காம எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்று அடம்பிடிக்கும் பெரியவர்கள், சிறியவர்கள் என பலர் உள்ளனர். இத்தனை ரசிகர்களை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில், பலர் கலந்து கொண்டிருந்தாலும் ஒரு சிலரின் பெயர் கூட நமக்கு நியாபகம் இருக்காது. ஆனால் ஒரு சிலர், வெளியே வந்தும் பலரால் பேசப்படுவது உண்டு. இது வெறும் நிகழ்ச்சியாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சியில் வரும் ஒரு சிலரை தங்களின் ரோல் மாடலாக சிலர் வைத்துக்கொள்வது உண்டு. அந்த வரிசையில் இடம் பெற்றவர் தான் விக்ரமன். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இவர், விசிக மாநில செய்தி தொடர்பாளர். முதலில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், 2016 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான விண்ணைத்தாண்டி வருவாயா என்ற தொடரில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் இரண்டாம் இடத்தை பிடித்திருந்தாலும், மக்கள் மனதில் முதல் இடம் பிடித்துள்ளார் என்றே கூறலாம். ஆனால் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த ஆண்டு, உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் கிருபா முனுசாமி என்பவர் விக்ரமன் மீது, தன்னை காதலிப்பதாக கூறி லட்சக்கணக்கில் பணம் வாங்கி என்னை ஏமாற்றி விட்டார் என்று புகார் அளித்திருந்தார். இந்த செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், விக்ரமன் இதுகுறித்து பேட்டியில் விளக்கம் கொடுத்து இருந்தார். மேலும், விக்ரமன் மீது பாலியல் வன்கொடுமை, எஸ்சி எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், பெண் வன்கொடுமை உட்பட 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்குப் பின் அந்த பிரச்சனையும் முடிந்துவிட்டது.

இந்நிலையில், தற்போது விக்ரமனுக்கு திருமணமாகியிருக்கும் தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருக்கும் ப்ரீத்தி கரிகாலன் என்பவரை தான் திருமணம் செய்திருக்கிறார். இவர்களுடைய திருமணம் சென்னையில் எளிமையாக நடைபெற்று இருந்தது. “ப்ரீத்தி அவர்கள் பார்த்திபன் சாரிடம் உதவி இயக்குனராக இருக்கிறார். கோடிட்ட இடங்களை நிரப்புக, கதை திரைக்கதை வசனம் இயக்கம் போன்ற படங்களில் எல்லாம் பணியாற்றி இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னாடியே எங்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது. அறிமுகமானதிலிருந்து எங்கள் இருவருக்கும் இடையே நல்ல ஒரு புரிதல் இருந்ததை எங்களால் உணர முடிந்தது. நண்பர்களாக சில காலம் நாங்கள் பழகினோம். அதுவே காதலாக மாறியது. இப்போது கல்யாணத்தில் முடிந்து இருக்கிறது.

ப்ரீத்தி முன்னால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் குமரி ஆனந்தனுக்கு பேத்தி. பெரியவர்கள் ஆசிர்வாதத்துடன் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு ரிசார்ட்டில் எங்களுடைய திருமணம் நடந்தது. தாலி கட்டிக்கனும்னு என்று பீரித்தி ஆசைப்பட்டதால் பெரியவர்கள் சுயமரியாதை முறைப்படி தாலி எடுத்துக் கொடுக்க அதை நான் அவர்கள் கழுத்தில் கட்டினேன். கிறிஸ்துவ முறைப்படியும் நாங்கள் மோதிரம் மாத்திக்கொண்டோம்”, என்று விக்ரமன் பேட்டி அளித்துள்ளார்.

Read More : கைகளில் மருதாணி, மெஹந்தி போட்டிருந்தால் வாக்களிக்க முடியாதா..? தீயாய் பரவும் தகவல் உண்மையா..?

Tags :
Advertisement