For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விஜய்யின் சர்கார்!… உங்கள் ஓட்டை வேறு யாராவது போட்டால் என்ன செய்வது? 

06:49 AM Apr 18, 2024 IST | Kokila
விஜய்யின் சர்கார் … உங்கள் ஓட்டை வேறு யாராவது போட்டால் என்ன செய்வது  
Advertisement

Lok sabha Election: நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நாளை தொடங்கவுள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியில் கேள்விகள் அதிகரித்து வருகின்றன. அந்தவகையில் வேறொருவர் வாக்களித்தால் என்ன நடக்கும் என்பது பற்றிய பொதுவான கேள்வி மக்களிடம் எழுந்துள்ளது. அதாவது, உங்கள் வாக்கு ஏற்கனவே வேறொருவரால் போடப்பட்டதாக நீங்கள் கண்டறிந்தால் என்ன செய்வீர்கள்? உங்களால் இன்னும் வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்த முடியுமா? இதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்? உங்கள் எல்லா கேள்விகளுக்குமான தீர்வுகளை இந்த தொகுப்பில் தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisement

யாராவது உங்கள் பெயரில் வாக்களித்தால் என்ன செய்வது? இப்படிப்பட்ட சூழ்நிலையில் நீங்கள் இருந்தால், அதற்கான ஏற்பாடு தேர்தல் ஆணையத்தால் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வாக்குச் சீட்டு இருந்தால் வாக்களிக்க வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், உங்கள் வாக்கு டெண்டர் செய்யப்பட்ட வாக்குச் சீட்டாகக் குறிக்கப்பட்டு தனித்தனியாக வைக்கப்படும்.

வாக்குச் சாவடிக்குள் வந்தவுடன் வாக்குச் சாவடியில் உங்கள் வாக்கு பதிவாகிவிட்டதாக வாக்குச் சாவடி அலுவலர் கூறினால், இந்தியத் தேர்தல் சட்டம் 1961-ன்படி யாராவது உங்கள் பெயரில் வாக்களித்தால், உடனடியாகத் தலைமை அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்லலாம்.

தேர்தல் நடத்தை விதிகளின் விதி 49P இன் படி டெண்டர் செய்யப்பட்ட வாக்குச்சீட்டு உங்களுக்கு வழங்கப்படும், மேலும் நீங்கள் டெண்டர் செய்யப்பட்ட வாக்குகளின் பட்டியலில் உங்கள் பெயரை கையொப்பமிட வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இதைச் செய்ய முடியாது. வாக்குப்பதிவு செய்யப்பட்ட வாக்குச்சீட்டு என்பது வாக்குப்பதிவு அலகில் காட்டப்படும் வாக்குச் சீட்டைப் போன்றது, அதைத் தவிர, "டெண்டர் செய்யப்பட்ட வாக்குச் சீட்டு" என்ற வார்த்தைகள், தேர்தல் நடத்துபவரால் முத்திரையிடப்பட்ட அல்லது அந்த நேரத்தில் தலைமை தாங்கும் அதிகாரியால் எழுதப்பட்டதாக இருக்கும்.

அதுபோல், ஒரு வாக்காளர் பதிவேட்டில் பதிவு செய்து அழியாத மை வைத்த பிறகு, அவர் வாக்களிக்க விருப்பமில்லை என கூறினால், விதி 71ன்படி படிவம் 21 பதிவேட்டில் குறிப்பு காலத்தில் Refused to vote (or) Let without Vote என எழுதி வாக்கு சாவடி அலவலர் கையொப்பமிட்டு, அதன் அருகில் வாக்காளர் கையொப்பத்தினையும் பெற வேண்டும். அதேபோல ஒரு வாக்காளர் வாக்களிக்கும் ரகசியத்தை மீறினால், விதி 69-ன்படி அவரை வாக்களிக்க அனுமதிக்க கூடாது.

மேலும் படிவம் 21 பதிவேட்டின் குறிப்பு காலத்தில் Not Allowed to vote, Voting Procedure Violating என குறிப்பிட்டு, அவரை வாக்குச்சாவடியை விட்டு வெளியே அனுப்பிவிட வேண்டும்” என கூறியுள்ளது. விஜய் நடித்த சர்கார் படம் வெளிவந்ததிலிருந்து 49பி சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டது. அதன்படி யாராவது நம்முடைய ஓட்டை மாற்றி கள்ள ஓட்டாக போட்டால் 49பி சட்டத்தின்படி வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்க அரசியலமைப்பு அனுமதி வழங்குகிறது.

நடப்பாண்டு மக்களவைத் தேர்தலில் சுமார் 97 கோடி இந்தியர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் 96.88 கோடி பேர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்க பதிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த 2019 லோக்சபா தேர்தலை விட, பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை ஆறு சதவீதம் அதிகரித்துள்ளது என ஆணையம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Readmore: மிகவும் செல்வாக்கு மிக்க பிரபலங்கள்!… அமெரிக்க டைம் இதழ் பட்டியலில் இடம்பிடித்த இந்தியர்கள்!

Advertisement