முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Rolls Royce | விற்பனைக்கு வருகிறது விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார்..? விலை எவ்வளவு தெரியுமா..?

It has been reported that actor Vijay's Rolls Royce car is up for sale.
04:19 PM Aug 02, 2024 IST | Chella
Advertisement

நடிகர் விஜய்யின் ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நடிகர் விஜய் தற்போது கோட் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பின் தன்னுடைய 69-வது படத்துடன் சினிமாவில் இருந்து விலகி முழுநேர அரசியலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளார். சினிமாவில் தனக்கென பெரிய புகழும் வணிகமும் இருக்கும்போதே இந்த முடிவை அவர் எடுத்துள்ளார். இந்நிலையில், நடிகர் விஜய் பயன்படுத்தி வந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனைக்கு வந்துள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.

2012ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்த ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் காருக்கு 132% வரி விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், விஜய் இந்த வரியைச் செலுத்தாமல் வாகனத்தைப் பயன்படுத்தி வந்தார். இதனையறிந்த நீதிமன்றம் வரி செலுத்த உத்தரவிட்டதுடன் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது. தொடர்ந்து, பீஸ்ட் படப்பிடிப்பு தளத்தில் தன் காரைக் கொண்டு வந்து படக்குழுவினரை வைத்து ஓட்டினார். அந்த வீடியோ வெளியாகி வைரலானது. தற்போது, எம்பயர் ஆட்டோ என்கிற கார்களை விற்கும் நிறுவனம் மூலம் இந்த கார் ரூ. 2.5 கோடி ஆரம்ப விலையுடன் விற்பனைக்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Read More : விவசாயம் அழிந்து வருகிறது..!! காகித ஆலை வேண்டுமா..? உணவு வேண்டுமா..? நீதிபதிகள் சரமாரி கேள்வி..!!

Tags :
சினிமாநடிகர் விஜய்ரோல்ஸ் ராய்ஸ் கார்
Advertisement
Next Article