For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விஜய்யின் கட்சி பெயர் அதிரடி மாற்றம்..!! இன்று வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

07:54 AM Feb 17, 2024 IST | 1newsnationuser6
விஜய்யின் கட்சி பெயர் அதிரடி மாற்றம்     இன்று வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Advertisement

'தமிழக வெற்றி கழகம்' என்ற தனது கட்சியின் பெயரில் 'க்' என்ற எழுத்தை சேர்த்து 'தமிழக வெற்றிக் கழகம்' என்று மாற்ற விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்குவார் என நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், ஒருவழியாக பிப்ரவரி 2ஆம் தேதி 'தமிழக வெற்றி கழகம்' என்ற புதிய கட்சியை தொடங்கினார். அக்கட்சியின் தலைவராக நடிகர் விஜய் அறிவிக்கப்பட்டு, தேர்தலில் நேரடியாக களமிறங்குவது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை 3 பக்க அறிக்கையாக வெளியிட்டார்.

இந்நிலையில், கட்சியின் பெயர் தமிழக வெற்றி கழகமா அல்லது தமிழக வெற்றிக் கழகமா என்ற கேள்வி எல்லோருக்கும் ஒரு குழப்பமாக இருந்தது. இதற்கு பல்வேறு விமர்சனங்களும் முன்வந்தன. அந்த விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு அதற்கு தீர்வு காணும் வகையில், அக்கட்சியின் தலைவர் விஜய், கட்சியின் பெயரில் 'க்' என்ற எழுத்தை பயன்படுத்த வேண்டும் என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து நேற்று முதல் அக்கட்சியின் பேனர்களில் 'க்' சேர்க்கப்பட்டு 'தமிழக வெற்றிக் கழகம்' என்றே பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரசிகர்களும், நிர்வாகிகளும் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற பெயரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement