For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

விஜய்யின் முதலமைச்சர் கனவு..!! ரஜினிகாந்த் சொன்ன பதில்..!! அடுத்த படம் இவருடன் தான்..!!

02:17 PM Feb 10, 2024 IST | 1newsnationuser6
விஜய்யின் முதலமைச்சர் கனவு     ரஜினிகாந்த் சொன்ன பதில்     அடுத்த படம் இவருடன் தான்
Advertisement

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் அடுத்த படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்தார். ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா இயக்கி இருக்கும் 3-வது படம் லால் சலாம். இந்தப் படத்தில் 'மொய்தீன் பாய்' என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் பிரதான வேடங்களில் நடித்துள்ளனர். மத நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு விளையாட்டுப் படம் என சொல்லப்படுகிறது.

Advertisement

இத்திரைப்படத்தில் 'மொய்தீன் பாய்' என்னும் வேடத்தில் ரஜினிகாந்த் நடிக்க, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும், விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே.எஸ்.ரவிக்குமார், தம்பி ராமையா, விவேக் பிரசன்னா, நிரோஷா மற்றும் தான்யா பாலகிருஷ்ணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம் நேற்று (பிப்ரவரி 9 ஆம் தேதி) திரையரங்குகளில் வெளியானது.

இந்நிலையில், ஐதராபாத்தில் வேட்டையன் படப்பிடிப்பு முடித்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் விமானம் முலம் சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”லால் சலாம் படம் ரசிகர்களுக்கும், மக்களுக்கும் மிகவும் பிடித்திருக்கிறது என்று கேள்விப்பட்டேன். படம் வெற்றி அடைந்து உள்ளது. படத்தை தயாரித்த லைகா நிறுவனம் மற்றும் படக்குழுவினருக்கும் பாராட்டுக்கள். வேட்டையன் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்து விட்டது. 20 சதவீதம் முடிந்து தீபாவளிக்கு வெளியாகும். அடுத்து லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்க உள்ளேன். விரைவில் படப்பிடிப்பு தொடங்கும்” என்றார்.

மேலும், விஜய்யை தொடர்ந்து விஷாலும் அரசியலுக்கு வரதா சொல்றாங்க.. நடிகர்கள் எல்லாம் அரசியலுக்கு வர்றேன்னு சொல்றாங்க.. முதல்வர் பதவி அவ்வளவு இலகுவான பதவியா..? என ரஜினிகாந்திடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு அரசியல் குறித்து பேச வேண்டாம் என கூறிச் சென்றார்.

Tags :
Advertisement