முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நினைவை விட்டு நீங்காத விஜயகாந்தின் திரைப்படங்கள்..!! திரையரங்குகளில் 300 நாட்கள் ஓடி மாபெரும் சாதனை..!!

11:50 AM Dec 28, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ் திரைத்துறையில் 'கேப்டன்' விஜயகாந்த் படைத்த சாதனைகள் எண்ணிலடங்காதவை. இவரது படங்கள் 300 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனை படைத்தவை. அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்த விஜயகாந்தின் படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Advertisement

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், தென்னிந்திய நடிகர் சங்க தலைவர், அரசியல்வாதி, சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் என 71 வருட தனது வாழ்நாளில் பல தடங்களை பதித்தவர் கேப்டன் விஜயகாந்த். தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக திரைத்துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். அவரது தலைமை பண்பிற்கு சான்றாகவே திரைத்துறையினரும், மக்களும் அவரை 'கேப்டன்' என அன்புடன் அழைத்து வந்தனர்.

திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்த விஜயகாந்தின் படங்கள் :

சின்ன கவுண்டர் (1992) - 315 நாட்கள்

கேப்டன் பிரபாகரன் (1991)- 300 நாட்கள்

மாநகர காவல் (1991) - 230 நாட்கள்

புலன் விசாரணை (1990) - 220 நாட்கள்

வானத்தைப் போல (2000) - 175 நாட்கள்

ஊமை விழிகள் (1986) - 200 நாட்கள்

பூந்தோட்ட காவல்காரன் (1988) - 180 நாட்கள்

செந்தூரப்பூவே (1988) - 186 நாட்கள்

பாட்டுக்கு ஒரு தலைவன் (1989) - 175 நாட்கள்

என் ஆசை மச்சான் (1994) - 175 நாட்கள்

வல்லரசு (2000) - 112 நாட்கள்

வைதேகி காத்திருந்தாள் (1984) - 175 நாட்கள்

ரமணா (2002), சேதுபதி ஐபிஎஸ் (1994) - 150 நாட்கள்

அம்மன் கோவில் கிழக்காலே (1986) - 175 நாட்கள்

திரைத்துறைக்குப்பின் அரசியலில் கவனம் செலுத்திய விஜயகாந்த், 2011இல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு எதிர்கட்சித்தலைவராக சட்டப்பேரவையில் அமர்ந்தார். இந்நிலையில் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார். திரையுலகிலும் சரி, அரசியலிலும் சரி அவரது அயராத உழைப்பும், ஆற்றிய பணிகளும் அளவிட முடியாதவை.

Tags :
அரசியல்கேப்டன்சாதனைசினிமாதிரையுலகம்விஜயகாந்த்விஜயகாந்த் மறைவு
Advertisement
Next Article