முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு..! வெளியான தகவல்..!

07:29 PM Dec 01, 2023 IST | 1Newsnation_Admin
Advertisement

நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சில ஆண்டுகளாக கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வில் இருந்து வருகிறார். இதன் காரணமாக கடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவருக்கு இருந்த நீரிழிவு பிரச்சினையால், வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, அந்த விரல் அகற்றப்பட்டது.

Advertisement

இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 18ஆம் தேதி இருமல், காய்ச்சல், சளி தொந்தரவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது வரை சிகிச்சை பெற்று வருகிறார் விஜயகாந்த். இரு தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்ட மியாட் மருத்துவமனை, விஜயகாந்த் அவர்களின் உடல்நிலை சீராக இல்லை என்றும், அவருக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருப்பார். அவருக்கு 14 நாட்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அந்த மருத்துவ அறிக்கை காரணமாக தொண்டர்கள் கவலையடைந்தனர். மேலும், பலர் விஜயகாந்தின் உடல்நலம் பெற பிரார்த்தனை செய்து வருகின்றனர். அதேபோல், விஜயகாந்த் உடல்நலம் பூரண குணமடைய அரசியல் தலைவர்களும் அறிக்கை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் மேற்படி சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை என்று தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இரு தினங்களுக்கு முன்பு மருத்துவ அறிக்கை வெளியானதற்கு பிறகு, வீடியோ வெளியிட்ட பிரேமலதா விஜயகாந்த் மருத்துவ அறிக்கை சாதாரணதுதான் என்றும், விஜயகாந்த் விரைவில் குணமடைவார். நாங்கள் கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறோம். யாரும் பயப்பட வேண்டாம், அவர் பூரண நலம் பெற்று வீடு திரும்புவார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் விஜயகாந்த் உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

Tags :
vijayakanth health updateவிஜயகாந்த்விஜயகாந்த் உடல்நிலை
Advertisement
Next Article