முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

விஜயகாந்த் உடல்நிலை!… இனி தொண்டர்களை சந்திக்கமாட்டார்!

08:37 AM Dec 17, 2023 IST | 1newsnationuser3
Advertisement

உடல்நிலை மோசமாகிவிட்டதால், இனி வரும் காலங்களில் ஓய்வு எடுப்பார் என்றும், அரசியல், சினிமா நிகழ்வுகளில் எதிலும் கலந்துகொள்ளமாட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சமீபத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு அவ்வப்போது இப்படி உடல்நிலை மோசமானது வழக்கம். இதற்காக அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதும் வழக்கம். ஆனால் இந்த முறை அவரின் உடல்நிலை மிகவும் நலிவுற்றதாக கூறப்படுகிறது.

அவருக்கு இதயத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு, ரத்த கொதிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தது. முக்கியமாக நுரையீரல் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு தொடர்ச்சியாக 1 வாரம் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்.. முழுமையாக உடல்நிலை குணமாகி அவர் கடந்த 2 நாட்களுக்கு முன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து, சென்னையில் கடந்த 14ம் தேதி தேமுதிக பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. அக்கட்சி தலைவர் விஜயகாந்த் தலைமையில் திருவேற்காட்டில் நடைபெற்றது.

கூட்டத்தில் முக்கிய நிகழ்வாக கட்சியின் பொருளாளராக இருந்த பிரேமலதா விஜயகாந்த் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக காரில் அழைத்து வரப்பட்ட விஜயகாந்தை கண்டதும் தேமுதிக பெண் தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இருக்கையில் விஜயகாந்தால் அமர்ந்திருக்கவே முடியவில்லை. உதவியாளர்கள் இருவர் அவருக்கு பின்னாலேயே நின்று இந்தப் பக்கம் ஒருவர், அந்தப்பக்கம் ஒருவர் என பார்த்துக்கொண்டனர். எப்படி இருந்த மனுஷன், இப்படி ஆகிட்டாரே என மனம் கேட்காமல் கலங்கிய கண்களுடன் பொதுக்குழுவில் மகளிரணியினர் அமர்ந்திருந்தனர். அதேபோல் ரசிகர் மன்ற காலத்திலிருந்து விஜயகாந்துடன் இருக்கும் நிர்வாகிகளும் கண் கலங்கி அழுதுவிட்டனர். அந்தளவுக்கு விஜயகாந்தின் உடல் துரும்பாய் இளைத்து போயிருக்கிறது. கை விரல்கள் எல்லாம் மெலிந்து வளைந்து காணப்பட்டது.

இதையடுத்து, மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன 3 நாளில் விஜயகாந்தை பொதுக்குழு கூட்டத்திற்கு அழைத்து வந்தது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பிவருகின்றனர். இந்தநிலையில் உடல்நிலை மோசமாகி விட்டதால் விஜயகாந்த் இனிவரும் காலங்களில் ஓய்வு எடுப்பார். அரசியல் மற்றும் சினிமா நிகழ்வுகளில் கலந்துகொள்ள மாட்டார். அவர் ஓய்வு எடுக்கும் முன் கடைசியாக தொண்டர்களை சந்திக்கும் விதமாக பொதுக்குழு கூட்டத்திற்கு அழைத்து வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
not meetVijayakanth's healthVolunteersஉடல்நிலை மோசமாகிவிட்டதுதொண்டர்களை சந்திக்கமாட்டார்விஜயகாந்த்
Advertisement
Next Article