முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

உடனே வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்ட விஜயகாந்தின் உடல்..!! கண்ணீரில் தொண்டர்கள்..!!

09:22 AM Dec 28, 2023 IST | 1newsnationuser6
Advertisement

தமிழகத்தின் தன்னிகரில்லாத தலைவராக, தமிழ் திரையுலகின் நிரந்தர கேப்டனாக வலம் வந்த நடிகர் விஜயகாந்த் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

Advertisement

முன்னதாக, கடந்த நவம்பர் 18ஆம் தேதி இரவு விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். “தனது வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காகவும், தொண்டையில் வலி இருப்பதால் அதன் சிகிச்சைக்காகவும் விஜயகாந்த் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். சிகிச்சைக்குப் பின் ஓரிரு நாட்களில் அவர் வீடு திரும்புவார்” என்று ம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் 29ஆம் தேதி காலை, ‘நடிகர் விஜயகாந்தின் உடல் நிலை நல்ல முன்னேற்றம் காணப்பட்ட போதிலும் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால் அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல் நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது’ என்று மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.

பின்னர், நடிகர் விஜயகாந்த் நலமுடன் வீடு திரும்ப தொண்டர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், சிகிச்சை முடிந்து விஜயகாந்த் நலமுடன் வீடு திரும்பினார். பின்னர், தேமுதிக செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களிலும் கலந்து கொண்டார். இந்நிலையில், நேற்று முன் தினம் வழக்கமான பரிசோதனைகளுக்காக மியாட் மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விஜயகாந்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால், மீண்டும் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தேமுதிக அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இன்று சிகிச்சைப் பலனின்றி நடிகர் நடிகர் விஜயகாந்த் காலமானார். திரையுலகிலும், தமிழக அரசியலிலும் மிகப் பெரும் ஆளுமையாக வலம் வந்த விஜயகாந்த், லட்சக்கணக்கான தொண்டர்களையும், ரசிகர்களையும் மீளாத் துயரில் ஆழ்த்தி, நிரந்தரமாகத் துயில் கொண்டார்.

இந்நிலையில், விஜயகாந்தின் உடல் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட உடனேயே அவரது உடல் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவரது உடலை பார்த்து தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுதனர்.

Tags :
கேப்டன்சென்னைமறைவுவிஜயகாந்த்
Advertisement
Next Article