“அவுங்க கிட்டவே நிற்க முடியல”; பிரபல நடிகையுடன் நடிக்க மறுத்த விஜயகாந்த்…
இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், ரசிகர்களின் மனதில் இருந்து நீங்காத ஒரே நடிகர் என்றால் அது நடிகர் விஜயகாந்த் அவர்கள் தான். கேப்டன், புரட்சிக் கலைஞர் என ரசிகர்களால் அழைக்கப்பட்ட இவர், எந்த பாகுபாடும் இல்லாமல், எல்லா மனிதர்களுடனும் அன்பாக பழகி, பல உதவிகளை செய்து வந்த நல்ல மனிதர். தனது எதார்த்தமான நடிப்பால், தனக்கென்று ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிய இவர், உயிரோடு இருக்கும் போது பலர் இவரை பற்றி பேசாவிட்டாலும், அவரது மறைவிற்கு பிறகு தான் பலர் அவரது பெருமையை பேசி வருகிறார்கள்.
விஜயகாந்த் அவர்கள் இறந்த போது, தங்களின் வீட்டில் ஒரு இழப்பு நடந்தது போல், லட்சக்கணக்கான பேர் வந்து கதறி அழுது அஞ்சலி செலுத்தினர். இப்படி லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதையும் அன்பையும் சம்பாதித்த இவரை பற்றி எந்த ஒரு கிசுகிசுக்களும் வந்ததே இல்லை. நடிகை ராதிகாவை காதலித்தார் என்பதை விட வேறு எந்த பெண்ணோடும் இவரை இணைத்து பேசியதே இல்லை. அந்த அளவுக்கு இவர் ஒரு கண்ணியமான நடிகராகவும் வாழ்ந்து வந்தார். அந்த வகையில், பிரபல நடிகை ஊர்வசி பேட்டி ஒன்றில் விஜயகாந்தை குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
ஊர்வசியை எப்போதுமே விஜயகாந்த் தங்கச்சி தங்கச்சி என்று தான் அழைப்பாராம். இதனால் ஒரு படத்திற்கு ஊர்வசி தான் ஹீரோயின் என்று சொன்னதும், “நான் ஊர்வசியை தங்கச்சியாக பார்க்கிறேன், அவருடன் எப்படி நான் ஜோடியாக நடிக்க முடியும்” என்று கூறி ஊர்வசியுடன் ஜோடியாக நடிக்க மாட்டேன் என மறுத்துவிட்டாராம். அதன் பிறகு அனைவரும் கட்டாயப்படுத்தி, சம்மதிக்க வைத்து படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல படத்தில் நடிக்கும் பொழுது விஜயகாந்த் ‘அவருடைய கலர் என்ன. என்னுடைய கலர் என்ன. கிட்டவே நிற்க முடியல’ என்றெல்லாம் கலரை வைத்து கிண்டல் பண்ணி பேசுவாராம்.
Read more: இளம் பெண்களை கர்ப்பமாக்கினால், 20 லட்ச ரூபாய் பரிசாம்… ஆண்களே ஜாக்கிரதை!!!