விளம்பரத்தில் நடிக்க ரூ.1 கோடி கொடுத்தும் நடிக்க மறுத்த விஜயகாந்த்..!! அவர் சொன்ன அந்த வார்த்தை..!!
விஜயகாந்த் 1979ஆம் ஆண்டு 'அகல் விளக்கு' திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி 2015ஆம் ஆண்டு வரை 150-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து தமிழ் மக்களின் அன்பை கவர்ந்து பிரபலமானவர். 1998ஆம் ஆண்டில் கொக்ககோலா நிறுவனம் தனது விளம்பர படத்தில் நடிப்பதற்காக விஜயகாந்திடம் ரூ.1 கோடி சம்பளம் தருகிறோம் எங்களின் நிறுவனத்திற்காக நீங்கள் நடித்து தர வேண்டும் என கேட்டுள்ளனர்.
அந்த கால கட்டத்தில் ரூ.1 கோடி என்பது இன்றைய கால கட்டத்தில் கிட்டத்தட்ட ரூ.30 கோடிக்கு சமம். ஆனால், விஜயகாந்த் அந்த நிறுவனத்திடம் ஒரு கேள்வி கேட்டார். அதாவது, நான் உங்கள் கொக்ககோலா விளம்பரத்தில் நடித்தால் உண்மையிலேயே என் ரசிகர்கள் அனைவரும் வாங்குவார்கள். என் முகத்திற்காக பொதுமக்கள் அனைவரும் உங்கள் கொக்ககோலா குளிர்பானத்தை வாங்கி அருந்துவார்கள். இதனால் பாதிக்கப்பட போவது என் தமிழ் மக்கள் தான்.
ஏனென்றால், என் தமிழகத்தில் சிறு சிறு குளிர்பான நிறுவனம் உள்ளது. நான் உங்கள் கொக்ககோலா நிறுவனம் கொடுக்கும் பணத்திற்காக நடித்தால் தமிழகத்தில் உள்ள சிறிய குளிர்பான நிறுவனம் பாதிக்கப்படும். அதனால் எனக்கு பணம் முக்கியம் இல்லை. எனக்கு தமிழ்நாடும், தமிழ் மக்களும் தான் முக்கியம். என்னால் தமிழக நிறுவனம் பாதிக்கப்படும் என்றால் அந்த விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன். அப்படியொரு பணம் எனக்கு தேவையில்லை என அந்நிறுவனத்தினரை திருப்பி அனுப்பி வைத்தார் விஜயகாந்த்.