முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

2026இல் விஜய் தான் முதல்வர்..!! இதுவே நமது இலக்கு..!! தொண்டர்களுக்கு நம்பிக்கையை விதைத்த புஸ்ஸி ஆனந்த்..!!

05:05 PM Feb 09, 2024 IST | 1newsnationuser6
Advertisement

நடிகர் விஜய் தன்னுடைய சினிமாவை விட்டு வெளியேறி, முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறியது யாரும் எதிர்பாராத ஒன்றாகவே உள்ளது. விஜய்யின் இந்த அதிரடி செயலை பார்த்து, ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் ரஜினி - கமலுடன் ஒப்பிட்டு தளபதியை புகழ்ந்து தள்ளி வருகின்றனர். காரணம், ரஜினிகாந்த் கடந்த 25 ஆண்டுகளாகவே அரசியலுக்கு இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என போக்கு காட்டியது மட்டுமின்றி, அரசியல் குறித்து அறிக்கை உள்ளதாக தெரிவித்த இரு தினங்களுக்கு முன்பு, அரசியல் தனக்கு சரி பட்டு வராது எனக்கூறி, ஒட்டு மொத்த ரசிகர்களையும் ஏமாற்றியவர். ரஜினி அரசியலுக்கு வராததன் காரணம் அவரின் உடல்நிலை என்பது ஏற்றுக்கொள்ள கூடிய ஒன்றாக இருந்தாலும் கூட, ரசிகர்களின் எதிர்பாப்பும் ஏக்கமும் சுக்குநூறானது.

Advertisement

விஜய் அரசியல் கட்சி குறித்து அறிவித்த பின்னர் முதல் முறையாக நடந்த பனையூரில் நடந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டதோடு, விஜய் வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலம் ரசிகர்களை சந்தித்துள்ளார். புஸ்ஸி ஆனந்த் ஒருங்கிணைத்த இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது, 2026-ல் தளபதியை முதலமைச்சராக ஆக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த வீடியோவில் தொடர்ந்து பேசியுள்ள புஸ்ஸி ஆனந்த், "உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பில் தான் எல்லாமோ இருக்கிறது. இதற்கு முன்பு நாம் எந்த மாதிரி இருந்தோம், என்பது வேறு இதற்கு மேற்பட்டு தலைவர் என்ன சொல்கிறாரோ அதை தான் செய்ய போகிறோம். தலைவர் என்கிற பதவி இனி யாருக்கும் இல்லை. 2026ஆம் ஆண்டில் முதலமைச்சராக தலைவரை நாம் அமர வைக்க வேண்டும் என பேசியுள்ளார்” இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Tags :
தொண்டர்கள்நடிகர் விஜய்புஸ்ஸி ஆனந்த்
Advertisement
Next Article