முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

பொன்விழா ஆண்டில் அரசியல் ஆட்டத்தை தொடங்கிய விஜய்..!! முதல் தேர்தலிலேயே முதல்வர் பதவியா..?

07:27 AM Feb 03, 2024 IST | 1newsnationuser6
Advertisement

நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தை தொடங்கி விட்டார். தமது கட்சிக்கு “தமிழக வெற்றி கழகம்” என்று பெயரிட்டுள்ளார். 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை குறிவைத்து இந்த ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். முதல்வர் நாற்காலியில் அமரும் அளவிற்கு நடிகர் விஜய் ஜாதகம் சாதகமாக இருக்கிறதா? வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என்று கணித்துள்ளனர் ஜோதிடர்கள்.

Advertisement

பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா, பாக்யராஜ், டி.ராஜேந்தர், விஜயகாந்த், சரத்குமார், கமல் வரிசையில் அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ளார் நடிகர் விஜய். சினிமாவில் செல்வாக்கு பெற்ற தலைவராக இருந்தாலும் அரசியலில் வெற்றி பெற மக்கள் செல்வாக்கு நிச்சயம் தேவை. அது அனைவருக்கும் கிடைப்பதில்லை. நடிகர் விஜய்க்கு மக்களிடம் வசீகரம் எப்படி உள்ளது என்று ஜாதகத்தை வைத்து பார்க்கலாம்.

நடிகர் விஜய் கடகராசி பூச நட்சத்திரம் கன்னி லக்னத்தில் பிறந்தவர். ஜூன் மாதம் 22ஆம் தேதி 1974ஆம் ஆண்டு பிறந்த விஜய்க்கு இந்தாண்டு பொன்விழா ஆண்டு. தற்போது சுக்கிரதிசை நடைபெறுகிறது. இன்னும் 10 ஆண்டுகளுக்கு விஜய்க்கு சுக்கிரதிசைதான் உள்ளது. எனவே, விஜய்யின் அரசியல் பயணம் அற்புதமாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கண்டித்துள்ளனர். 2024இல் கட்சி ஆரம்பித்தாலும் விஜய்யின் இலக்கு 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்தான்.

இந்தாண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்துள்ள விஜய், சட்டசபை தேர்தலில் களமிறங்குவோம் என்று கூறியுள்ளார். அரசியல் கட்சி ஆரம்பித்த உடன் எம்எல்ஏ ஆனவர் விஜயகாந்த். அடுத்த 5 ஆண்டுகளில் எதிர்கட்சி தலைவரானார். விஜய் கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகளில் பெரிய அளவில் வெற்றி பெற முடியாவிட்டாலும், 2031ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கிய பயணமாக இருக்கும்.

விஜய்க்கு தற்போது கோச்சாரப்படி அஷ்டமத்து சனி நடைபெறுகிறது. அஷ்டமத்து சனி காலத்தில் எந்த ஒரு நல்ல காரியத்தையும் தொடங்க மாட்டார்கள். அதே நேரத்தில் விஜய் ஜாதகப்படி, தசாபுத்தி படி நேரம் சரியாக இருப்பதால் கட்சி பெயரை அறிவித்து விட்டார். 2026ஆம் ஆண்டு சனி பகவான் பாக்ய சனியாக 9ஆம் இடத்திற்கு இடம் மாறிய பிறகுதான் அவர் தேர்தல் அரசியலில் களமிறங்குவார். விஜய்க்கு ஜாதகம் சாதகமாகவே உள்ளது என்றும் கிரகங்களின் ஆதரவு இருப்பதால் மக்களின் ஆதரவோடு அவர் மிகப்பெரிய அரசியல் தலைவராக உருவெடுப்பார் என்றும் ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

2026 சட்டசபை தேர்தலில் ஆழம் பார்க்கும் விஜய் 2031ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மிகப்பெரும் அரசியல் தலைவராக உருவெடுப்பார் என்றும் கணித்துள்ளனர். பிரதமர் மோடி ஜாதகம் போலவே நடிகர் விஜய் ஜாதகமும் அரசியல் தலைவருக்கான யோக ஜாதகமாக உள்ளது என்று கூறியுள்ள ஜோதிடர்கள், அரசியல் செல்வாக்கு மிக்க தலைவராக உயர்வதற்கு பெண்களின் ஆதரவும் அதிகம் கிடைக்கும் என்றும் கணித்திருக்கின்றனர்.

"எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய கட்சியின் சார்பில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது என்று தனது முதல் அறிக்கையில் கூறியுள்ளார் விஜய். எது எப்படியே அரசியல் ஆட்டத்தை தனது பொன்விழா ஆண்டில் ஆரம்பித்து விட்டார் விஜய். அவருக்கு அரசியல் களம் வெற்றியை பரிசளிக்குமா பொறுத்திருந்து பார்க்கலாம்.

Tags :
அரசியல் பயணம்எம்ஜிஆர்கருணாநிதிடி.வி.கே. கட்சிதமிழக வெற்றி கழகம்நடிகர் விஜய்
Advertisement
Next Article