For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பகவத் கீதை பற்றி அம்பேத்கர் எழுதியதை விஜய் படிக்க வேண்டும்...! விசிக எம்.பி அறிவுரை

Vijay should read what Ambedkar wrote about Bhagavad Gita
08:42 AM Oct 28, 2024 IST | Vignesh
பகவத் கீதை பற்றி அம்பேத்கர் எழுதியதை விஜய் படிக்க வேண்டும்     விசிக எம் பி அறிவுரை
Advertisement

பகவத் கீதையைப் படிப்பதோடு அதைப்பற்றி டாக்டர் அம்பேத்கர் எழுதியிருப்பதை விஜய் அவர்கள் படிக்க வேண்டும் என விசிக எம்.பி ரவிக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisement

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு பிரம்மாண்டமாக நேற்று நடந்தது. அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கைகளை கட்சி நிர்வாகிகள் வாசித்தனர். இதனையடுத்து விஜயிடம் பகவத் கீதை, பைபிள் நூல்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் பகவத் கீதையைப் படிப்பதோடு அதைப்பற்றி டாக்டர் அம்பேத்கர் எழுதியிருப்பதை விஜய் அவர்கள் படிக்க வேண்டும் என விசிக எம்.பி ரவிக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; தனது கொள்கை வழிகாட்டிகளில் ஒருவராக புரட்சியாளர் அம்பேத்கரை திரு விஜய் அவர்கள் குறிப்பிட்டிருக்கிறார். மதச்சார்பின்மைதான் தனது கொள்கை என்று அறிவித்திருக்கும் விஜய், இன்று மாநாட்டு மேடையில் இந்து மதத்தின் குறியீடாக பகவத் கீதையையும், இஸ்லாம் மதத்தின் குறியீடாகக் குர்ஆனையும், கிறிஸ்தவ மதத்தின் குறியீடாக பைபிளையும் நினைவுப் பரிசாகப் பெற்றார். பகவத் கீதையைப் பற்றி அம்பேத்கர், ‘புரட்சியும் எதிர்ப் புரட்சியும்’ என்ற தனது நூலில் விரிவாக எழுதியிருக்கிறார்.

“ பௌத்தம் இந்த சமூகத்தில் தார்மீக மற்றும் சமூகப் புரட்சியை ஏற்படுத்தியது. மௌரியப் பேரரசர் அசோகர் புத்த மதத்தைத் தழுவியபோது, சமூகப் புரட்சி அரசியல் புரட்சியாக மாறியது. மௌரியப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, பௌத்த மன்னர்களால் பாதிக்கப்பட்ட பிராமணர்கள், புஷ்யமித்ர சுங்கனின் தலைமையில் ஒரு எதிர்ப்புரட்சியைத் தொடங்கினார்கள். அந்த எதிர்ப்புரட்சிதான் பிராமணியத்தை மீட்டெடுத்தது.பகவத் கீதை, இந்த எதிர்ப் புரட்சிக்குக் கருத்தியல் மற்றும் தார்மீக நியாயத்தை வழங்குவதற்காக இயற்றப்பட்டது” என்று தனது நூலில் அம்பேத்கர் குறிப்பிட்டிருக்கிறார்.

விஜய் அவர்கள் பகவத் கீதையைப் படிப்பதோடு அதைப்பற்றி டாக்டர் அம்பேத்கர் எழுதியிருப்பதையும் படிக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இல்லாவிட்டால் அம்பேத்கரை சாரமற்ற வெற்றுக் குறியீடாகப் பயன்படுத்துவதில் போய் அது முடிந்துவிடும் என தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement