2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் - சீமான் கூட்டணி உறுதி..!! மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் செல்வேன்..!!
2026ஆம் ஆண்டில் நானும், என் தம்பி விஜய்யும் ஒன்று சேருவதற்கு காத்திருக்கிறேன் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
மே 18, இனப் படுகொலை நாளையொட்டி நாம் தமிழர் கட்சி சார்பில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன எழுச்சி நாள் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”ஒரு பெண் என்னை கடந்த 15 ஆண்டுகளாக தவறாக பேசிக் கொண்டிருந்ததை அரசும், எல்லா ஊடகவியலாளர்களும் கவலைப்படாமல் கொண்டாடிக் கொண்டிருந்தீர்கள். எனக்கும் ஒரு குடும்பம் இருக்கு. எனக்கும் 2 பசங்க இருக்காங்க. எனக்கு மனைவி, அம்மா, அப்பா, மாமியார் என இருக்காங்க. ஆனால், அது குறித்து யாருக்கும் கவலையில்லை.
பெண் காவலர்கள் குறித்து சவுக்கு சங்கர் தவறாக பேசியது கண்டிக்கத்தக்கது. அந்த கைது நடவடிக்கையை நான் எதிர்க்கவில்லை. அதே நேரத்தில் குண்டர் சட்டம் போடும் அளவுக்கு இந்த பிரச்சனை ஒன்றும் பெரிதல்ல. தொடர்ந்து பேசிய அவர், 2026ஆம் ஆண்டில் நானும், என் தம்பி விஜய்யும் ஒன்று சேருவதற்கு காத்திருக்கிறேன். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நடக்கும் மாநாட்டிற்கு அழைப்பு வந்தால் நிச்சயம் கலந்து கொள்வேன். அண்ணனும் தம்பியும் சந்திப்பது வழக்கம். அப்படிதான் விஜய்யும், நானும் சந்திப்பது இருக்கும். நாட்டில் பிரச்சனையே அண்ணனும், தம்பியும் சேர கூடாது என்பது தான், 2026 கூட்டணி குறித்து வெயிட்டிங்” என்றார்.
Read More : பிஎஃப் ஊழியர்களுக்கு செம குட் நியூஸ்..!! 3 முதல் 4 நாட்கள் தான்..!! வெளியான அறிவிப்பு..!!