முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Vijay | பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கத்தில் ’மாஸ்டர்’ பட காட்சிகள்..!! அதிர்ச்சியில் மாணவர்கள்..!!

03:44 PM Mar 11, 2024 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் பேஸ்புக் பக்கத்தை மர்ம நபர்கள் முடக்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் பள்ளிக்கல்வித்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. முகநூல், எக்ஸ், இன்ஸ்டா உள்ளிட்ட சமூகவலைதள பக்கங்களில் பள்ளிக்கல்வித்துறைக்கு பக்கங்கள் துவங்கப்பட்டு, அதில் அரசின் நலத் திட்டங்கள், சாதனை மாணவ - மாணவிகளின் பேட்டிகள், நுழைவுத் தேர்வு, போட்டித் தேர்வுகள் குறித்த விவரங்கள், ஆசிரியர்களின் வீடியோ உள்ளிட்டவை நாள்தோறும் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் பேஸ்புக் பக்கம், சில மர்மநபர்களால் இன்று முடக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தின் காட்சிகள், தனித்தனி வீடியோவாக இந்தி மொழியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இதனால், மாணவர்கள் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து பேஸ்புக் நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. காவல்துறை சார்பில் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Read More : Ponmudi | பொன்முடி வழக்கு..!! ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை..!! உச்சநீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!

Advertisement
Next Article