காதலியை கரம்பிடிக்கிறார் விஜய் மல்லையாவின் மகன்..!! லண்டனில் பிரம்மாண்ட திருமணம்..!!
விஜய் மல்லையாவின் மகன் சித்தார்த்தா மல்லையா தனது காதலி ஜாஸ்மினை விரைவில் திருமணம் செய்யவுள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள சித்தார்தா, "திருமண வாரம் தொடங்கிவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ஜாஸ்மினுடன் இருக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார். சித்தார்த்தா - ஜாஸ்மின் திருமணத்திற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக கடந்தாண்டு சித்தார்த்தா ஜாஸ்மினுக்கு புரோபஸ் செய்திருந்தார்.
அமெரிக்காவின் கல்ஃபோர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற Halloween 2023 விழாவில் சித்தார்த்தா - ஜாஸ்மின் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் விஜய் மல்லையா தனது காதலிக்கு தனித்துவமான முறையில் புரோபஸ் செய்தார். அவர்களின் திருமணத்திற்கான நிச்சயதார்த்தமும் வித்தியாசமான முறையில் நடைபெற்றது. நிச்சயதார்த்த புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸில் பிறந்தவர் சித்தார்த்தா. லண்டன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வளர்ந்தார். அவர் வெலிங்டன் கல்லூரி மற்றும் லண்டனின் குயின் மேரி பல்கலைக்கழகத்தில் படித்தார். பின்னர் ராயல் சென்ட்ரல் ஸ்கூல் ஆஃப் ஸ்பீச் அண்ட் டிராமாவில் நடிப்பு பயின்றார். சித்தார்த் மல்லையா ஒரு நடிகரும் மாடலும் ஆவார். நாடகப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, சித்தார்த்தா ஒரு மாடலாகவும் நடிகராகவும் பணியாற்ற ஆரம்பித்தார். அவர் பாலியல் நகைச்சுவைத் திரைப்படமான பிரம்மன் நாமன் உட்பட பல திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றியுள்ளார். ஆன்லைன் வீடியோ நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அவர், கின்னஸின் சந்தைப்படுத்தல் மேலாளராக பணியாற்றினார்.
Read More : ஒரு சொட்டு மழை கூட பெய்யாத விநோத கிராமம்..!! எப்படித்தான் வாழ்கிறார்கள்..? சுவாரஸ்ய தகவல்..!!