முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

”சமூகத்தில் நன்மதிப்பில் உள்ளவர்களை தேடும் விஜய்”..!! யார் யாருக்கு அழைப்பு விடுத்துள்ளார் தெரியுமா..?

11:48 AM Feb 02, 2024 IST | 1newsnationuser6
Advertisement

விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாக பதிவு செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், அதன் பெயர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் தலைவராக நடிகர் விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு அனைத்து மாவட்ட முக்கிய நிர்வாகிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. புதிதாக கட்சி தொடங்கப்பட்ட பிறகு புதிய ஒரு செயலி நிறுவப்பட்டு அதன் மூலம் உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தொடங்கப்பட உள்ளது. விஜய் மக்கள் இயக்கம், புதிதாக தொடங்கப்பட உள்ள கட்சியின் பெயர் தமிழக முன்னேற்ற கழகம் என தகவல் வெளியானது.

இந்நிலையில், சமூகத்தில் நன்மதிப்பில் உள்ளவர்களை கட்சியில் 2ஆம் கட்டத் தலைவர்களாக உருவாக்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளார். அரசியல் சார்பின்றி செயல்படும் அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு விஜய் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகளிர், ஒடுக்கப்பட்டோர், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான அமைப்புகளின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சியில் இணைந்து தன்னோடு செயல்படுமாறு விஜய் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
அரசியல் கட்சிதமிழக முன்னேற்ற கழகம்நடிகர் விஜய்விஜய் மக்கள் இயக்கம்
Advertisement
Next Article