விஜய் அரசியலுக்கு வருவது உறுதி..!! ஆட்சி அமைக்கப்போவது இந்த வருடத்தில்தான்..!! ஜாதக கணிப்பு..!!
லியோ திரைப்பட வெற்றி விழாவில் விஜய் 2026ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவார் என பேசப்பட்டது. தற்போது அது குறித்த தகவல் வைரலாகி அவரது ஜோதிடமும் கணிக்கப்பட்டு தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என பேசப்படுவதற்கு காரணம் என்னவென்றால், சில ஆண்டுகளுக்கு முன், நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவேன் எனக் கூறிவிட்டு, பின் தனது உடல்நிலைக் காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை எனக் கூறிவிட்டார்.
எனவே, ரஜினி போல் வருவேன், ஆனா வரமாட்டேன் என்ற வகையில், விஜய்யின் அரசியல் அறிவிப்பும் இருந்துவிடுமோ? அல்லது சினிமா ப்ரோமோஷனுக்கான யுக்தி அமைந்துவிடுமா? போன்ற பல கேள்விகள் பொதுவாகவே விவாதிக்கப்படுகிறது. தற்போதைய காலங்களில் விஜய் தமிழக மக்களின் உள்ளம் கவர்ந்த நாயகனாக வலம் வருகிறார்.
இவ்வாறான நிலையில், விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து அவரின் சொந்த ஜாதகம் என்ன கூறுகிறது என்பதை பார்க்கலாம். அதன்படி, அவருடன் ஒத்த ஜாதகங்கள் கலை துறையின் மூலம் அரசியலில் அடி எடுத்து வைப்பதையே காட்டுகிறது. கலைத்துறையில் சாதித்து, அதன் வழியே அதிகாரப் பதவியில் அமர்வதையும் குறிக்கிறது. இதை வைத்துப்பார்த்தால் நிச்சயமாக விஜய் தீவிர அரசியலுக்கு வருவார் என்பதை அவரது ஜாதகக் கட்டங்கள் சொல்வதாக கூறப்படுகிறது.
அதேபோல, வருகிற 2026இல் நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் நடிகர் விஜய் கணிசமான வெற்றியை நிச்சயம் பெறுவார் என்பதே கணிப்பு. அவரது ஜாதக கட்டங்களின்படி, அவருக்கு இளைஞர்களின் பலமும், தாய்மார்களின் அன்பும் பெருகுவது நிச்சயம். விஜய், தமக்கு கலைத்துறையின் மூலம் கிடைத்த பெயரைச் சிறிதும் கலங்கமில்லாமல் அரசியலில் அப்படியே கொண்டு செல்ல முடியும். அதை அவர் சரியாகச் செய்தாலே போதும், வெற்றி வீட்டு வாசலைத் தேடி வரும் எனக் கூறுகிறது ஜாதகக் கட்டங்கள்.
அதன்படி, 2026 தேர்தல் நடைபெற்றால் தீவிர அரசியலில் விஜய் நுழைந்தால் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பெறுவார் என கூறப்படுகிறது. ஆனால், அது ஆட்சியை அமைக்கும் வகையில் இருக்காது என்றும் மக்கள் பேசக்கூடிய அளவிலான வெற்றியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. தற்போது விஜய் தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்து 'கப்பு முக்கியம் பிகிலு' என்று கூறுவது, தேர்தலில் வெற்றி பெறுவது தான் முக்கியம் என்பதையே வெளிப்படையாக தனது ரசிர்களுக்கு சொல்வதையே காட்டுகிறது. ஆரம்ப காலங்களில் சொல்லிக் கொள்ளும் அளவு வெற்றிகளைப் பெற்றாலும், 2030-க்குப் பிறகு அமோக வெற்றிகளைப் பெறுவார் என்பதே இறுதியான கணிப்பாக கூறப்படுகிறது.