முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Vijay | விஜய்யின் கடைசி படத்தை இயக்குகிறார் ஹெச்.வினோத்..!! முழுக்க முழுக்க அரசியல் படம்..!!

11:56 AM Apr 02, 2024 IST | Chella
Advertisement

நடிகர் விஜய் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் 'கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, அவர் அரசியலுக்கு வருவதையும் அறிவித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். நீண்ட காலமாக விஜய்க்கு அரசியல் திட்டம் உள்ளதை அறிந்தவர்கள், அவருடைய திடீர் அறிவிப்பால் தமிழக அரசியலில் என்ன நடக்கப் போகிறது என்பதை ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement

அரசியல் அறிவிப்புடன் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என்பதையும் விஜய் அறிவித்திருந்தார். இறுதியாக, விஜய் - 69 படத்துடன் அவர் சினிமாவில் இருந்து விலகுவார் எனத் தெரிகிறது. விஜய்யின் கடைசி படமென்பதால், இதை யார் இயக்குவார் என்கிற கேள்விக்கு புதிய விடை கிடைத்துள்ளது. அதன்படி, விஜய்யின் கடைசி படத்தை இயக்குநர் ஹெச். வினோத் இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

வினோத் நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு படங்களை இயக்கினார். நடிகர் கமல்ஹாசன் - வினோத் கூட்டணியில் புதிய படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் அப்படம் கைவிடப்பட்டது. இந்நிலையில், விஜய் - வினோத் திரைப்படம் முழுக்க முழுக்க அரசியலை மையமாக வைத்தே உருவாக உள்ளதாகக் கூறப்படுகிறது. பழைய நேர்காணல் ஒன்றில் வினோத், 'நடிகர் விஜய்யை அரசியல் கதையில்தான் நடிக்க வைப்பேன்' எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More : ’உத்தரவை மீறிவிட்டு மன்னிப்பு கேட்டால் எப்படி ஏற்க முடியும்’..? பதஞ்சலி நிறுவன வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டம்..!!

Advertisement
Next Article