முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கூட்டணி பேச்சுவார்த்தையில் இறங்கிய விஜய்..!! சீமான், திருமாவுடன் ரகசிய பேச்சு..!! அதிர்ச்சியில் திமுக..!!

It has been reported that actor Vijay is in talks with Nam Tamil, Visika and Communist parties to form an alliance for the 2026 assembly elections.
10:57 AM Jun 25, 2024 IST | Chella
Advertisement

2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைக்க நாம் தமிழர், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் நடிகர் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டிற்கு மேல் திமுகவும், அதிமுகவும் மாறி, மாறி ஆட்சி செய்து வருகின்றன. இந்த கட்சிகளுக்கு மாற்றாக பல கட்சிகள் உருவான நிலையிலும், தற்போது அந்த கட்சிகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. ஒரு வேளை இந்த திராவிட கட்சிகளிடமே கூட்டணி வைத்துக்கொண்டு ஒரு சில தொகுதிகளை பெற்று சமாதானம் அடைந்து விட்டது. இந்நிலையில் தான் கருணாநிதி, ஜெயலலிதா என்ற இரண்டு மிகப்பெரிய தலைவர்கள் இல்லாத நிலையில், எப்படியாவது மக்களின் ஆதரவை பெற்று தமிழ்நாட்டில் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என களம் இறங்க தயாராகிவிட்டார் விஜய்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு இதோ வருகிறார்... அதோ வருகிறார் என கூறப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் பின் வாங்கிவிட்டார். ஆனால் விஜய்யோ பிஸியாக படத்தில் நடித்து வரும் நிலையில், ஒரு படத்திற்கு 100 கோடிக்கு மேல் சம்பாதித்து வரும் போது திடீரென படத்தில் நடிப்பதை நிறுத்திவிட்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். திடீரென அரசியல் கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்டு, தேர்தல் ஆணையத்திலும் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரை பதிவு செய்தார்.

இந்நிலையில், 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எப்படி சந்திக்கலாம், யாரை எல்லாம் கூட்டணிக்கு அழைக்கலாம் என தவெக தலைவரும், நடிகருமான விஜய் ஆலோசித்து வருவதாக தெரிகிறது. அந்த வகையில், தமிழகத்தில் 10 சதவிகித வாக்குகளை பெற்று வரும் சீமானை கூட்டணியில் இணைப்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டது. சீமானுடன் தனியாக பல முறை ஆலோசனையையும் விஜய் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

அடுத்ததாக இந்த இரண்டு கட்சிகள் மட்டும் இணைந்தால் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்பதை உணர்ந்த விஜய், மேலும் ஒரு சில கட்சிகளையும், தனது குட்புக்கில் உள்ளவர்களை அழைக்கவும் திட்டமிட்டுள்ளார். அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியை கூட்டணிக்கு அழைக்க பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதே போல கம்யூனிஸ்ட் கட்சியையும் தங்கள் பக்கம் இழுக்க விஜய் திட்டமிட்டுள்ளார். ஆனால் தற்போது திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தையும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் தற்போது வரை Green சிக்னல் கொடுக்கவில்லை. எனவே, கால மாற்றத்தால் எந்த எந்த கட்சிகள் அணி மாறுவார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Read More : BREAKING | அரையிறுதிக்குள் அடியெடுத்து வைத்தது ஆப்கான்..!! போராடி தோற்ற வங்கதேசம்..!! சோகத்துடன் வெளியேறிய ஆஸ்திரேலியா..!!

Tags :
actor vijaycmSeemantvk vijay
Advertisement
Next Article