For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Viral Video | சூப்பர் ஸ்டார் படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த விஜய்..!! அதுவும் எப்படி வந்தார் தெரியுமா..?

Actor and president of Tamil Nadu Vetri Kazhagam, Vijay enjoyed watching the film Vediyaan in the theatre.
04:23 PM Oct 10, 2024 IST | Chella
viral video   சூப்பர் ஸ்டார் படத்தை தியேட்டரில் பார்த்து ரசித்த விஜய்     அதுவும் எப்படி வந்தார் தெரியுமா
Advertisement

நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இந்த படத்தில் பகத் பாசில், அமிதாப் பச்சன், அபிராமி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Advertisement

இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு வேட்டையன் படத்தின் முதல் காட்சி சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் நடிகர் தனுஷ் கண்டு களித்தார். அதேபோல், இசையமைப்பாளர் அனிருத்தும் தனுஷுடன் படம் பார்த்தார். இந்நிலையில் தான், நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய், வேட்டையன் படத்தை திரையரங்கில் பார்த்து ரசித்தார்.

அவர் அண்ணா சாலையில் உள்ள தேவி தியேட்டரில் வேட்டையன் படத்தை கண்டு மகிழ்ந்தார். விஜய் தலையில் தொப்பி அணிந்துக் கொண்டு, முகத்தில் முகமூடி போட்டுக் கொண்டு வந்தார். அவர் படம் பார்த்துவிட்டு காரில் ஏறிச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் படு வைரலாகி வருகிறது.

Read More : உங்ககிட்ட DigiLocker செயலி இருக்கா..? அதிரடியாக வந்த மாற்றம்..!! அது என்ன UMANG..? உடனே இதை பண்ணுங்க..!!

Tags :
Advertisement