முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வந்த விஜய்’..!! நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் என்ன சொல்லியிருக்காரு பாருங்க..!!

11:09 AM Feb 10, 2024 IST | 1newsnationuser6
Advertisement

அரசியலுக்கு வந்தால் நன்றாக சம்பாதிக்கலாம் என்கிற எண்ணம் நடிகர் விஜய்க்கு கிடையாது என்று நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் கூறியுள்ளார்.

Advertisement

நடிகர் விஜய் தான் அரசியலுக்கு வருகைத் தருவதை கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி உறுதிபடுத்தினார். விஜய் தனது கட்சிக்கு தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைத்தது குறித்து பல்வேறு அனுமானங்கள் முன்வைக்கப்படுகின்றன. விஜய் முதல் முறையாக அறிமுகமான படத்தின் பெயர் வெற்றி என்பதால் இந்தப் பெயரை வைத்துள்ளார் என்று விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர். இப்படியான நிலையில், விஜய்யின் முதல் படத்தில் நடித்த நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் விஜயின் அரசியல் வருகை குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

”விஜய் அரசியலுக்கு வருவது நாட்டில் மிகப்பெரிய பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. மக்களுக்கும் சேவை செய்வதில் ஆர்வமுள்ள யாராக இருந்தாலும் அவர்கள் அரசியலுக்கு வரலாம். குறிப்பாக, சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்து சாதித்தவர்களில் தமிழ்நாடு ஒரு முன்மாதிரி. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி எல்லாரும் சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள்தான். எளிய பின்னணியில் இருந்து வந்த காமராஜர் மக்களுக்கு நிறைய நலத் திட்டங்களை கொண்டு வந்தார்.

அவரை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். தற்போது இதே மாதிரியான நோக்கத்தோடு தான் விஜய் அரசியலுக்கு வருவதாக நான் பார்க்கிறேன். அவரை நான் முழுமனதோடு வரவேற்கிறேன். அரசியலில் சம்பாதிக்கும் நோக்கம் அவருக்கு இல்லை. விஜய் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். சினிமாவில் நிறைய சம்பாதிக்கும்போதே அவர் அரசியலுக்கு வருவது அவரது நல்ல நோக்கத்தையே காட்டுகிறது. அவர் வெற்றி பெறுகிறாரா இல்லையா என்பதை 2026இல் பார்த்துக் கொள்ளலாம். ஒரு முன்னணி நடிகர் மக்களுக்கு சேவை செய்ய நினைக்கிறார். அவருக்கு வாய்ப்பு கொடுப்பதில் எவ்வித தப்பும் இல்லை. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்று தெரிவித்துள்ளார்.

Tags :
அரசியல்ஒய்.ஜி.மகேந்திரன்சினிமாதமிழக வெற்றி கழகம்நடிகர் விஜய்விஜய் அரசியல்
Advertisement
Next Article